Samsung Galaxy Note 10 and Galaxy Note 10+: இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்
சாம்சங் கேலக்சி நோட் 10, கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு லேட்டஸ்ட் கேலக்சி நோட் ஸ்மார்ட்போன்களும் கடந்த மாதம் நியூயார்க்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவையும் இந்தியாவில் சாம்சங் நிறுவனம் துவங்கியது. கஸ்ட் 8-ல் துவங்கிய இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 வரை நடைபெறும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 23 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. நியூயார்க்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையும் வெளியிடப்பட்டது. 4 இந்திய மொழிகளின் பயன்பாடு கொண்ட S Pen வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.
8GB RAM + 256GB சேமிப்பு என்ற ஒரே அளவு வகையில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது சாம்சங் கேலக்சி நோட் 10. ஆரா ப்ளாக் (Aura Black), ஆரா க்ளோ (Aura Glow), மற்றும் ஆரா வொய்ட் (Aura White) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனிற்கு 69,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இதனுடன் அறிமுகமான சாம்சங் கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அவற்றில் 12GB RAM + 256GB சேமிப்பு அளவை கொண்ட ஒரு வகை 79,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மற்றொரு வகையான 12GB + 512GB மாடலின் விலை 89,999 ரூபாய்.
சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 23 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், ஆகஸ்ட் 8-ல் துவங்கிய இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என சாம்சங் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு சலுகையாக, கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தவர்கள் 9,999 ரூபாய் மதிப்புள்ள கேலக்சி பட்ஸை (Galaxy Buds) 4,999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி மற்றொரு முன்பதிவு சலுகையாக 19,990 ரூபாய் மதிப்பிலான சாம்சங் கேலக்சி வாட்ச் ஏக்டிவை (Samsung Galaxy Watch Active) 9,999 ரூபாய் என்ற விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
திரை அளவு, RAM, சேமிப்பு அளவு, கேமரா, மற்றும் பேட்டரி அளவுகளில் மட்டுமே வேறுபட்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள், மற்ற அனைத்து அம்சங்களையும் ஒன்றுபோலவே கொண்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட கேலக்சி நோட் 10, ஆண்ட்ராய்ட் 9.0 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.3-இன்ச் FHD+ (1080x2280 பிக்சல்கள்), இன்பினிட்டி-ஓ திரை, HDR10+ வசதி என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9825 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது.
மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 12 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் (77 டிகிரிகள்) கேமரா. 16 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா- வைட் ஆங்கிள் (123 டிகிரிகள்) கேமரா. 12 மெகாபிக்சல் அளவிலான தொலைதூர புகைப்பட லென்ஸ் கேமரா. முன்புறத்தில் ஹோல்-பன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 10 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது.
3,500mAh அளவிலான் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 25W சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து சிறப்பம்சங்களிலும் இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்றுபட்டுள்ள கேலக்சி நோட் 10+ ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் QHD+ (1440x3040 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ திரையை கொண்டுள்ளது. மற்றபடி பேட்டரி அளவில் மட்டும் மாறுதலைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 45W சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்