Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy M55s செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy M55s விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும். 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும். Samsung Galaxy M55s செப்டம்பர் 23 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்த்உள்ளது. நிறுவனத்தின் அடுத்த மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் என எதிர்பார்க்கப்படும் இந்த மாடல் இந்தியாவில் கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் வண்ணங்களில் விற்கப்படும். Samsung Galaxy M55s மாடலின் ரேம் மற்றும் மெமரி அளவு பற்றி சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.
அமேசானில் Samsung Galaxy M55s பற்றிய சில தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 6.7-இன்ச் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே இருக்கிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,000nits உச்ச பிரகாசம் கொண்டதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் தடிமன் 7.8 மிமீ என்று சாம்சங் கூறுகிறது. இது ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம்55 மாடலைப் போன்று இருக்கும் என தெரிகிறது. Qualcomm snapdragon 7 Gen 1 சிப்செட்டுடன் சந்தைக்கு வரக்கூடும் என தெரிகிறது. Adreno 644 GPU இருக்கலாம் என கூறப்படுகிறது. சோதனையின் போது சிங்கிள்-கோரில் 1003 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனைகளில் 2309 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக முடிவுகள் காட்டுகிறது. ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையாக கொண்டு இயங்கும்.
8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாம்சங்கின் 'நைட்டோகிராஃபி' குறைந்த ஒளி கேமரா அம்சங்கள் மற்றும் நோ ஷேக் கேம் பயன்முறை ஆகிய இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
Samsung Galaxy M55s ஆனது 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. பயனர்கள் முன் மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் படங்களையும் வீடியோவையும் எடுக்க முடியும், 5000mAh பெரிய பேட்டரி வழங்கப்படலாம். விரைவாக சார்ஜ் செய்ய, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கலாம் என கூறப்படுகிறது. Galaxy M55s தொடர்பான பிற விவரங்கள் அதன் அறிமுகத்திற்கு முந்தைய நாட்களில் வெளியிடப்படும். சுமார் ரூ.20,000 வரம்பில் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்