சாம்சங் கேலக்ஸி எம் 51-ஐ ,சாம்சங் கேலக்ஸி எம் 41 என்று அழைக்க ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.
Photo Credit: Onleaks/ Pigtou
சாம்சங் கேலக்ஸி எம் 51, 6.5 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி எம் 51 ரெண்டர்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த போன் ஒரு ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 51 ரெண்டர்கள் போனில் பக்கவாட்டில் வளைந்த விளிம்புகள் இல்லாத பிளாட் டிஸ்பிளேவுடன் வருவதாகக் கூறுகின்றன. பின்புற பேனலில் matte blue finish உள்ளது. மேலும், பின்புற கைரேகை ஸ்கேனரும் உள்ளது.
ஆன்லீக்ஸ் (OnLeaks) மற்றும் பிக்டோ (Pigtou) ஆகியவை சாம்சங் கேலக்ஸி எம் 51-ன் உயர் தெளிவுத்திறன் ரெண்டர்களை வெளியிட்டுள்ளன. அதோடு 360 டிகிரி ரெண்டர் வீடியோவும் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம் 50 இல்லை என்பதால், இந்த போன் Samsung Galaxy M40-ன் தொடர் என்று ஊகிக்கப்படுகிறது. வளைவுகள் விளிம்புகள் இல்லாத தட்டையான டிஸ்பிளே, எல்லா பக்கங்களிலும் மெல்லிய பெசில்ஸ் மற்றும் திரையின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி கேமரா கட் அவுட் கொண்ட ஹோல்-பஞ்ச் பேனல் ஆகியவற்றை ரெண்டர்கள் பரிந்துரைக்கின்றன.
பின்புறத்தில், இந்த போன் செவ்வக வடிவ தொகுதியில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மூன்று சென்சார்கள் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன, ஒன்றுக்கு கீழே மற்றொன்று, ஃபிளாஷ் பக்கத்தில் அமர்ந்திருக்கும். போர்டில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மேல் விளிம்பில் காணப்படுகிறது. வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் சாம்சங் கேலக்ஸி எம் 51-ன் வலது விளிம்பில் உள்ளன, மேலும் கீழ் விளிம்பில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் உள்ளது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி எம் 51, 6.5 இன்ச் பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டிருப்பதாகவும், 162.6x77.5x8.5 மிமீ (பின்புற கேமரா பம்ப் உட்பட 9.5 மிமீ) அளவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம் 51-ஐ கேலக்ஸி எம் 41 என்று அழைக்க ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை கூறுகிறது. அப்படி இல்லையென்றால், நிறுவனம் கேலக்ஸி எம் 50 போனை முழுவதுமாக தவிர்த்து கேலக்ஸி எம் 51-ஐ நேரடியாக அறிமுகப்படுத்தும். இது குறித்து எந்த தெளிவும் இல்லை, இந்த போன் அதிகாரப்பூர்வமானதும் நிறைய விஷயங்கள் தெளிவாக கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film