Photo Credit: Samsung
Samsung நிறுவனம் தனது புதிய Samsung Galaxy M35 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் AMOLED இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே, 50எம்பி பிரைமரி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வந்துள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy M35 5G ஆரம்ப விலை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலுக்கு 19,999.
8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி முறையே ரூ.21,499 மற்றும் ரூ.24,299 என்ற விலையில் விற்கப்படுகிறது.இது அமேசான், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக கிடைக்கிறது.
Samsung Galaxy M35 5G செல்போன் 6.6-இன்ச் முழு HD+ Super AMOLED Infinity-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் Exynos 1380 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Mali-G68 MP5 GPU கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
கேமராவை பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பு மேற்கொள்ள முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. Side-mounted Fingerprint Scanner கொண்டுள்ளது. USB Type-C audio, Stereo speakers, Dolby Atmos வசதிகள் உள்ளது. 6,000எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. 5G, இரட்டை 4G VoLTE சிம், Wi-Fi 6, புளூடூத் 5.3, GPS மற்றும் USB Type-C இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. 222 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்