சாம்சங் கேலக்ஸி ஜே 6 மொபைல் ரூ. 1,500 வரை குறைக்கப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி ஜே6 இப்போது விலை குறைக்கப்பட்டு சந்தையில் விற்பனையாகி வருகிறது. இதில் 3 ஜி.பி. ரேம் மெமரி / 32 ஜி.பி. இன்பீல்ட் மற்றும் 4 ஜி.பி. ரேம் மெமரி / 64 ஜி.பி. இன்பீல்ட் என 2 வகைகளில் இந்த மொபைல் ஃபோன் தியாரிக்கப்பட்டுள்ளது. இதில், 3 ஜி.பி. ரேம் வகை முன்பு ரூ. 13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தற்போது ரூ. 12,490-ஆக விலை குறைத்துள்ளனர். 4 ஜி.பி.மெமரி கொண்ட மொபைல் முன்பு ரூ. 15,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தற்போது ரூ. 13,990-ஆக விலையை குறைத்துள்ளனர்.
இந்த அதிரடி விலைக்குறைப்பின் மூலம் சீன ரக மொபைல்களான ஜியோமி மற்றும் ஹானோர் ஆகியவற்றுடன் சாம்சங் ஜே 6 போட்டியிடும் நிலையில் உள்ளது.
ஆன்ட்ராய்டு 8.0 ஓரியே இதில் உள்ளது. 5.6 இன்ச் திரை, எச்.டி. + சூப்பர் அமோல்டு பேனல், 250 ஜி.பி. வரை மெமரி கார்டு உபயோகிக்கும் திறன் உள்ளிட்டவை இதில் உள்ளன.
13 மெகா பிக்சல் மூலம் துல்லியமான புகைப்படங்களை பிடிக்கலாம். 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இதில் உள்ளது. பேட்டரி திறன் 3,000 ஆம்பியர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்