1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையான Samsung Galaxy Fold!

Samsung Galaxy Fold, 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை அடைந்துள்ளது என்று தென் கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையான Samsung Galaxy Fold!

பலவீனமான டிஸ்பிளே சிக்கல்களால் Samsung Galaxy Fold-ன் வெளியீடு இந்த ஆண்டு தாமதமானது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Samsung Galaxy Fold ரூ. 1,64,999-யாக விலையிடப்படுள்ளது
  • அக்டோபரில், 5,00,000 யூனிட்டுகளில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
  • அடுத்த ஆண்டுக்கான clamshell-like Fold போனில் சாம்சங் வேலை செய்கிறது
விளம்பரம்

Samsung Galaxy Fold, 1 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை அடைந்துள்ளது என்று தென் கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. Samsung Galaxy Fold, MWC 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆரம்பகால விமர்சகர்கள், டிஸ்பிளேவின் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிய பின்னர் சர்ச்சையில் சிக்கியது. உடையக்கூடிய foldable டிஸ்பிளே விமர்சகர்களின் கைகளில் உடைந்து கொண்டிருந்தது. எனவே, சாம்சங், போனின் வடிவமைப்பை சேதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைக்க, மீண்டும் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது. செப்டம்பர் மாதத்தில் இந்த போன் மீண்டும் வெளியிடப்பட்டது, மேலும் சமீபத்திய விற்பனை புள்ளிவிவரம் டெக் க்ரஞ்சின் டிஸ்ரப்ட் பெர்லின் (TechCrunch's Disrupt Berlin) நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

அக்டோபரில், இதன் விற்பனை 5,00,000 யூனிட்டுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது, அதாவது நிறுவனம் ஒரு மாதத்திற்கும் மேலாக அதே தொகையை விற்க முடிந்தது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் யங் சோன் (Young Sohn), Samsung Galaxy Fold-ன் 1 மில்லியன் யூனிட்டுகளை விற்க முடிந்தது என்று ஒரு நிகழ்வில் தெரிவித்தார். ஆரம்ப விற்பனைக்கு பிறகு இந்த எண்ணிக்கை பாராட்டத்தக்கது, குறிப்பாக $1,980 (சுமார் ரூ. 1,41,700, இந்தியாவில் இருந்தாலும், இதன் விலை ரூ. 1,64,999). "நான் நினைக்கிறேன், இந்த தயாரிப்புகளில் ஒரு மில்லியனை நாங்கள் விற்பனை செய்கிறோம். இந்த தயாரிப்பை $ 2,000-க்கு மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள்”, என்று சோன் (Sohn) நிகழ்வில் கூறினார் என்று டெக் க்ரஞ்ச் (TechCrunch) தெரிவித்துள்ளது.

சாம்சங் ஏற்கனவே தனது அடுத்த Galaxy Fold சாதனத்தில் செயல்பட்டு வருவதாகவும், பிப்ரவரி 18-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் திறக்கப்படாத நிகழ்வில் இதை அறிமுகப்படுத்துவதாகவும் வதந்தி பரவியுள்ளது. next-gen Galaxy Fold போன், செங்குத்து முறையில் திறந்து மடிந்து, ஒரு கிளாம்ஷெல் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை  $ 1,000-க்குக் குறைவாக இருக்கும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Motorola Razr (2019) இதேபோன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

  • KEY SPECS
  • NEWS
Display (Primary) 7.30-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 10-megapixel + 8-megapixel
Rear Camera 16-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 4380mAh
OS Android Pie
Resolution 1536x2152 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »