Photo Credit: Twitter/ Ben Geskin
சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போனில் பாப் அப் கேமரா வசதி இடம்பெறுகிறது.
இந்த மொபையில் போனின் வெளிப்புற தோற்றத்தை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனில் 'நியூ லைட்டிங் டிஸ்பிளே' பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வந்துள்ள தகவல் படி, சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன் தான் இந்த பாப் அப் அப்டேட் பெறும் முதல் போனாக இருக்கும்.
அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் ஒன்றான ‘இன்ஃவினிட்டி டிஸ்பிளே' சமளவு டிஸ்பிளேவை பெற உதவும். அதை தொடர்ந்து இந்த புதிய வகை அப்டேட் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ90 மற்றும் ஏ10 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.
இந்த பாப் அப் செல்ஃபி கேமரா விவோ நெக்ஸ் (34,529) , விவோ எக்ஸ் 25 மற்றும் ஓப்போ ஆர் 19 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.
சாம்சங் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்படும் 9 கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட் போன்களில், சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனும் அடங்கும். மேலும் கசிந்துள்ள தகவல்கள் படி இன் டிஸ்பிளே ஃவிங்கர் பிரிண்ட், ஸ்னாப் ட்ராகன் 710 செயல்பாடு மற்றும் 6 அல்லது 8 ஜிபி ரேம் உடன் வெளியாகவுள்ளது. சேமிப்பு வசதியாக 128 ஜிபி உள்ள நிலையில் 6.41 இஞ்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்டிராய்டு பைய் அப்டேட் பெறும் வாய்ப்புள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர்களை கவர 3டி சென்சாரை பொருத்தவும் தாக்கம் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளாக், கோல்டு மற்றும் ஸ்ல்வர் ஆகிய நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வெளியாக போகும் நிலையில், அறிமுகம் செய்யப்பட்டும் தேதி மற்றும் விலை போன்ற முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்