சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் அண்மையில் சீனாவில் அறிமுகமானது. தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் இந்த கேலக்ஸி A8s-ன் விலை தற்போது வெளியாகி உள்ளது. இந்த போன் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போனாகும். இதுகுறித்து கடந்த மாதமே சாம்சங் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த போனுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. இதனை சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஜெ.டி.காம் ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி A8s விலை;
சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனின் சீன விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,500) இது 6ஜிபி ரேம்/128ஜிபி நினைவகம் வகையின் விலையாகும். இதேபோல், 8ஜிபி ரேம் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஜெ.டி.காம் ஆகிய தளங்களில் கிடைக்கிறது. டிச.31 முதல் இந்த போன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A8s சிறப்பம்சங்கள்
சமீபத்தில் வந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனானது ஆண்டிராய்டு 8.1 ஓரியோ, 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் புல்எச்டி கொண்டுள்ளது. மேலும் இது, ஆக்டோகோர் குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 எஸ்ஓசி கொண்டுள்ளது. இதனுடன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்நினைவகம் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி கார்டு கொண்டு 512ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த போனில் பின்பக்க கேம, 24 மெகா பிக்ஸெல்ஸ், 5 மெகா பிக்ஸெல்ஸ் மற்றும் 10 மெகா பிக்ஸெல்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், 24 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கேமரா டிஸ்பிளே ஹோல் உள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், க்ரே கலர்களில் கிடைக்கிறது. யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்டபோனின் பேட்டரி திறன் 3,400mAh கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்