சாம்சங் கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ70, கேலக்ஸி ஏ80 மற்றும் கேலக்ஸி ஏ90 போன்கள் இன்று நடக்கும் விழாவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த விழா மாலை 5.30 மணிக்கு துவங்கவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ வரிசை போன்கள் இன்று உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளது. பேங்காக், மிலான் மற்றும் சா பாவ்லோ போன்ற நகரங்களில் நடக்கும் விழாக்களில் இன்று ஏ வரிசை தயாரிப்புகள் வெளியாகின்றனர்.
மற்ற நாடுகளில் இருப்பவர்களுக்காக சாம்சங் நிறுவனம் சார்பில் இந்த அறிமுக விழா 'லைவ் ஸ்டீரிம்' செய்ய ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் துவக்கம் முதலே சாம்சங் கேலக்ஸி ஏ வரிசை தயாரிப்புகளான - சாம்சாங் கேலக்ஸி ஏ10, சாம்சாங் கேலக்ஸி ஏ20, சாம்சாங் கேலக்ஸி ஏ30 மற்றும் சாம்சாங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் உலகமுழுவதும் வெளியாகின. இறுதியாக தற்போது சாம்சாங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் இந்த அறிமுக விழாவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியான தகவலின்படி, பேங்காக், மிலான் மற்றும் சா பாவ்லோ போன்ற நகரங்களில் நடக்கும் விழாக்களில் இன்று 'லைவ் ஸ்டீரிம்' செய்யப்படுகின்றனர். பேங்காக்கில் நடக்கும் அறிமுக விழா இன்று மாலை 5.30 மணிக்கு லைவ் ஸ்டீரிம் செய்யப்படுகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல கேலக்ஸி ஏ10 (ரூ.8,490), கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30(ரூ.16,960) மற்றும் கேலக்ஸி ஏ50 (ரூ.19,990) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளனர். இதனால் சாம்சாங் கேலக்ஸி ஏ40, சாம்சாங் கேலக்ஸி ஏ60, சாம்சாங் கேலக்ஸி ஏ70, சாம்சாங் கேலக்ஸி ஏ80 மற்றும் சாம்சாங் கேலக்ஸி ஏ90 போன்கள் இன்று நடக்கும் விழாவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
கடந்த மாதம் ஐரோப்பாவில் முன்பதிவுக்கு சாம்சாங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் வெளியானது. இதன் மதிப்பு ரூ.19,500 ஆக மதிப்பிடப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள், 5.9 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபைன்ட் திரை, ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸ்னாஸ் 7885 SoC, 4 ஜிபி ரேம், இரண்டு பின்புற கேமராகள் , 25 மெகா பிக்சல் செஃல்பி கேமரா, 64ஜிபி மெமரி வசதி, பின்புற ஃபிங்கர் பிரின்ட் வசதி மற்றும் 3,100mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளதாக எதிர்பார்கப்படுகிறது.
அதுபோல் இன்று வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் முக்கிய தகவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மற்றும் ஓன் யுஐ மென்பொருட்களை கொண்டுள்ளது. 6.7 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபைன்ட் திரை, ஆக்டா-கோர் பிராசஸ்சர், 6 மற்றும் 8ஜிபி ரேம் வசதி, 128ஜிபி மெமரி வசதி, (32+8+5) மெகா பிக்சல்களை கொண்ட மூன்று பின்புற கேமராக்கள், 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே மற்றும் 4,500mAh பேட்டரி வசதி போன்ற அமைப்புகளை கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 மற்றும் கேலக்ஸி ஏ90 போன்களை பற்றிய தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றனர். நாட்ச் இல்லாத திரை இந்த போனில் இடம்பெறும் என எதிர்பார்கப்படுகறிது.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ80 மற்றும் கேலக்ஸி ஏ90 போன்களில் அமைந்திருக்கும் பின்புற கேமராக்கள் சுழலும் வசதியை பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முன்புறத்தில் இருக்கும் செஃல்பி கேமரா மற்றும் நாட்ச்கான இடத்தை நீக்கிவிட்டு நாட்ச் இல்லாத திரையை கொண்டு இந்த போன் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது. 6.73 இஞ்ச் திரை, ஸ்னாப்டிராகன் 7150 SoC, 48 மற்றும் 8 மெகா பிக்சல் கேமார சென்சார், 3,700mAh பேட்டரி மற்றும் 25W வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்ற அமைப்புகள் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online