சாம்சங் நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமராவுடன் கேலக்சி A70S-ஐ அறிமுகப்படுத்தலாம்.
Photo Credit: Samsung
கேலக்சி A70-ஐ தொடர்ந்து A70S-ஐ அறிமுகப்படுத்தவிருக்கும் சாம்சங்
சாம்சங் நிறுவனம், கடந்த மார்ச் மாதம் கெலக்சி A70-ஐ உலகம் முழுக்க அறிமுகம் செய்தது. இன்ஃபினிடி-யூ(Infinity-U) திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இன்னிலையில், சாம்சங் அறிமுகப்படுத்து அடுத்த ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக வெளியான கெலக்சி A70-ன் அடுத்த வகையாக இருக்கலாம் எனவும் கெலக்சி A70S என பெயரிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் துவக்கத்தில், சாம்சங் நிறுவனம் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. 64 மெகாபிக்சல் அளவு கொண்ட இந்த கேமரா, குறைந்த ஒளி நேரங்களில் 16 மெகாபிக்சல் அளவு வரை படங்கள் எடுக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈடி நியூஸ்(ETNews) குறிப்பிடும் தகவலின்படி, இந்த கேமரா இந்த வருடத்திலேயே அறிமுகப்படுத்தப்படலாம், மேலும் கெலக்சி A70S என்ற புதிய ஸ்மார்ட்போனில் இந்த கேமராவை பொருத்தி சாம்சங் நிறுவனம் வெளியிடலாம் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், இந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்ட தகவலின்படி, கேலக்சி நோட் 10, இந்த ஆண்டில் அறிமுகமாகலாம் எனவும், ஆனால் அதில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வெளியான கெலக்சி A70 ஸ்மார்ட்போன், 6.7-இன்ச் FHD+ திரை, மற்றும் 32 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவை கொண்டுள்ளது. மேலும், ஸ்னேப்ட்ராகன் 670 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 8GB RAM வரையிலான அளவுகளை கொண்டு வெளியாகிறது.
இந்த கேலக்சி A70S, தனது முந்தைய ஸ்மார்ட்போனான கெலக்சி A70 போன்றோ அல்லது அதிலிருந்து சிறிய வேறுபாடுகளுடன் வெளியானாலும் வெளியாகலாம். தனது A-தொடர் ஸ்மார்ட்போன்களில், 64 மெகாபிக்சல் கேமராவை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒப்போ, சியோமி, ஹவாய் நிறுவனங்களை தாண்டி தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது சாம்சங். ஏற்கனவே, இந்த நிறுவனங்களால், அறிமுகப்படுத்தப்பட்ட 48 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்தாலும், 64 மெகாபிக்சலுடன், உலகிலேயே முதன்முதலில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் இதுதான்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?