சமீபத்தில் மிகவும் எதிர்பார்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி ஏ40 தற்போது நெதர்லாந்தில் அறிமுகமாகியுள்ளது. பல தரப்பட்ட தகவல் கசிவுகளுக்குப் பிறகு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கறுப்பு, நீலம், கோரல் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் வெளியாக வாய்புள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ40 விலை:
நெதர்லாந்தில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் 249 யூரோ. அதாவது ரூ.19,500க்கு மதிப்பிடப்படுகிறது. சாம்சங் சார்பில் வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி பாங்காக், மிலான் மற்றும் சாவ் பாவுலோ நகரங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ40 அறிமுகமாகவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அமைப்புகள்:
வெளியாகியுள்ள தகவல்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40 இரண்டு சிம்கார்டு ஸ்லாட்களை கொண்டிருக்கும் எனப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சூப்பர் ஆமொலெட் இன்ஃபினிட்டி திரையையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் சாம்சங் எக்னாஸ் 7885 SoC மற்றும் 4ஜிபி ரேமையும் பெற்றுள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன், அதில் முக்கியமான 16 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை இந்த போனில் 25 மெகா பிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனைப் பொருத்தவரை 64ஜிபி சேமிப்பு வசதி இடம் பெற்றுள்ளது. டைப் சி சார்ஜர், 3.5mm ஹெட்போன்ஸ் ஜாக் மற்றும் 3,100mAh பேட்டரி போன்ற பல முக்கிய வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்