அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருள் கொண்ட இந்த கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் வரும் ஜூன் மாதத்திற்குள் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சாம்சங் ஏ40 வரும் ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பாவில் வெளியாகும்
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான சாம்சங்கின் 'கேலக்ஸி ஏ' தயாரிப்புகள் (கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50) தொடர்ந்து தற்பொது சாம்சங் கேலக்ஸி ஏ40 உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைப் பற்றிய அறிவுப்புகள் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில் அதன் விலை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
அத்துடன் இந்தப் புதிய மாடல் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தயாரிப்புகள் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகின்றது.
கசிந்துள்ள தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ40, ரூ.20,000 மதிப்பில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில் வரும் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் எனப்படுகிறது.
ஜெர்மனியில் இருக்கும் இணையதளங்களில் வெளியான தகவல்படி, இந்த புதிய கேலக்ஸி ஏ40 எக்ஸ்னாஸ் 7885 எஸ்.ஓ.சி, 4 ஜிபி ரேம் மற்றும் அண்ட்ராய்டு பையில் இயங்குவதாக தகவல் கசிந்துள்ளது. வெளியாகும் தேதி இன்னும் அறியப்படாத நிலையில் யூகே, போலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வெளியாகவுள்ளது.
கேலக்ஸி ஏ40-ஐப் பொறுத்தவரை 'ஸ்லைடிங் கேமரா'-க்களை கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் கேமராவின் இடத்தை அறிந்து, அது செல்ஃபி கேமராவாக செயல்பட வேண்டுமா அல்லது பின்புற கேமராவாக இருக்க வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளலாம்.
6.41 இஞ்ச் திரை, ஸ்னாப்டிராகன் 710 மற்றும் அண்ட்ராய்டு பைய் மற்றும் ஓன் யுஐ மென்பொருளை கொண்டுள்ளது. மேலும் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Tere Ishk Mein OTT Release Date Reportedly Revealed: When and Where to Watch it Online??