இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A30s-ன் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்!

இந்தியாவில் வெளியானது Samsung Galaxy A30s-ன் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்!

Samsung Galaxy A30s, waterdrop-style notch உடன் HD+ Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A30s-ன் புதிய 128GB வேரியண்ட் அறிமுகம்
  • புதிய வேரியண்ட் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இன்னும் கிடைக்கவில்லை
  • Samsung Galaxy A30s முதலில் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Samsung Galaxy A30s-ன் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் Gadgets 360-க்கு தெரிவித்தது. இந்த புதிய வேரியண்ட் தற்போதுள்ள Galaxy A30s மாடலுடன் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. கூடுதலாக, புதிய Galaxy A30s வேரியண்டை அறிமுகப்படுத்தியதோடு, செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய ஆப்ஷனின் விலையையும் சாம்சங் குறைத்துள்ளது. 


இந்தியாவில் Samsung Galaxy A30s-ன் விலை:

இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A30s-ன் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இதுவரை அறிமுகமாகவில்லை என்றாலும், புதிய மாடல் தற்போது ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்க வழங்கப்பட்டுள்ளது. இது இன்னும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை. செப்டம்பரில், தென் கொரிய நிறுவனம் முதலில் Galaxy A30s-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் நாட்டில் அறிமுகப்படுத்தியது.

Samsung, முதலில் Galaxy A30s-ன் 64GB ஸ்டோரேஜை ரூ. 16,999-க்கு கொண்டுவந்தது. இருப்பினும், ஸ்மார்ட்போன் கடந்த காலங்களில் இரண்டு விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளது, மேலும் இந்த வார தொடக்கத்தில் அதன் விலையை ரூ. 14.999-யாக குறைக்கப்பட்டது. இந்த போன் Prism Crush Violet, Prism Crush Black மற்றும் Prism Crush White கலர் ஆப்ஷன்களில் வருகிறது.


Samsung Galaxy A30s-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A30s, Android Pie-ல் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio மற்றும் waterdrop-style notch உடன் 6.4-inch HD+ (720x1560 pixels) Infinity-V Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் ultra-wide-angle lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-megapixel depth சென்சார் அவற்றுடன் f/1.7 lens உடன் 25-megapixel முதன்மை சென்சாரும் அடங்கும் .

செல்ஃபிகளுக்காக, Samsung Galaxy A30s-ல் f/2.0 lens உடன் 16-megapixel கேமரா சென்சாரும் உள்ளது.

Samsung Galaxy A30s-ல் 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் உள்ளது. இவை இரண்டும் microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில் in-display fingerprint சென்சாரும் உள்ளது. இறுதியாக, இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜின் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy A30s Price in India Cut, Now Available at Rs. 14,999

Samsung Galaxy A30s With Triple Rear Cameras, 4,000mAh Battery Launched in India

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »