சாம்சங் நிறுவனம், தனது கேலக்ஸி A20s ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த போனை சில நாட்களுக்கு முன்னர்தான் சாம்சங் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சர்வதேச மார்க்கெட் பலவற்றில் A20s-ஐ வெளியிட்டுள்ளது சாம்சங். சாம்சங்கின் A வரிசை போன்களின் லேட்டஸ்ட் வெர்ஷனாக A20s வந்துள்ளது. கடந்த மாதம்தான் சாம்சங் கேலக்ஸி A30 மற்றும் A50 போன்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி A20s விலை:
போனை வெளியிட்டாலும், எந்த சந்தையில் எவ்வளவு விலையில் A20s விற்கப்படும் என்பது குறித்து சாம்சங் தகவல் தெரிவிக்கவில்லை. இந்தியாவிலும் அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை. அதே நேரத்தில் மலேசியாவில் A20s-ன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலையானது சுமார் 12,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே விலையில் இந்தியாவிலும் A20s விற்கப்படலாம். கருப்பு, நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அதே நேரத்தில் நாடுக்கு நாடு போனின் வண்ணங்களில் மாறுதல் இருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி A20s சிறப்பம்சங்கள்:
டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதி கொண்ட A20s, ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள், 6.5 இன்ச் முழு எச்.டி+ திரை, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பெற்றிருக்கின்றன.
கேமராவைப் பொறுத்தவரை, A20s, பின்பறத்தில் மட்டும் டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்களை இந்த போன் பெற்றிருக்கின்றது. பொக்கே எஃபெக்டுக்காக ‘லைவ் ஃபோகஸ்' ஆப்ஷனுயும் இந்த போனில் உள்ளது.
ரியர் மவுன்டெட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4000 எம்.ஏ.எச் பேட்டரி, 15W அதிவேக சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது A20s. 4G LTE, ப்ளூடூத் 4.2, வை-ஃபை 802.11 b/g/n, வை-ஃபை டைரெக்ட், ஜிபிஎஸ், Glonass, Beidou, மற்றும் Galileo போன்ற இணைப்பு ஆப்ஷன்களும் போனில் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்