Android அப்டேட் பெறும் Samsung போன்கள்! எந்தெந்த போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும்....?

சாம்சங்கின் அப்டேட் சாலை வரைபடம் இஸ்ரேலுக்கானது. இது, பிற பிராந்தியங்களில் பொருந்தாது.

Android அப்டேட் பெறும் Samsung போன்கள்! எந்தெந்த போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும்....?

Photo Credit: SamMobile

பிற பிராந்தியங்களுக்கான Android 10 அப்டேட் வெளியீட்டு அட்டவணையில் எந்த தகவலும் இல்லை

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy Note 10 & Galaxy S10 ஆகியவை முதலில் மேம்படுத்தப்படும்
  • Galaxy Note 9 மற்றும் Galaxy A30 ஆகியவை ஜனவரி 2020-ல் புதுப்பிக்கப்படும்
  • Galaxy S9, Android 10 புதுப்பிப்பை ஏப்ரல் மாதத்தில் தரையிறக்கும்
விளம்பரம்

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை 2019-ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு உறுதியளித்த பல பிராண்டுகளில் சாம்சங் ஒன்றாகும். ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான One UI 2.0-க்கான பீட்டா நிரல் முழு வீச்சில் இருக்கும்போது, ​​இஸ்ரேலில் சாம்சங் வெளியிட்டுள்ள வெளியீட்டு அட்டவணை, நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கான நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் மட்டுமே தொடங்கும் என்று தெரிவிக்கிறது. 2020 ஜனவரியில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும் முதல் போன்களில் Galaxy Note 10 மற்றும் Galaxy S10 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாலை வரைபடம் (roadmap) சாம்மொபைலால் (SamMobile) கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேலில் உள்ள சாம்சங் உறுப்பினர்கள் செயலியில் (Samsung Members app) வெளியிடப்பட்டது. இது இஸ்ரேலில் மட்டுமே பின்பற்றப்படும் ரோல்அவுட் அட்டவணையாக இருக்கும் என்றும், இது எல்லா பிராந்தியங்களிலும் உள்ள சாம்சங் தொலைபேசி பயனர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறது. ஆண்ட்ராய்டு 10 அப்டேடைப் பெறும் முதல் போன்கள் Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy Note 9 மற்றும் Galaxy A30ஆகும். மேற்கூறிய போன்கள் ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 10-க்கு மேம்படுத்தப்படும்.

Samsung Galaxy S9 மற்றும் Galaxy S9+ ஆகியவை ஏப்ரல் மாதத்தில் நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும். ஒரே மாதத்தில் நான்கு Galaxy A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டையும் சாம்சங் வெளியிடும், அவற்றில் Galaxy A7 (2018), Galaxy A9 (2018), Galaxy A50 மற்றும் Galaxy A70 ஆகியவை அடங்கும். flagship Galaxy Tab S6-ம் ஏப்ரல் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10-க்கு மேம்படுத்தப்படும். Galaxy A30s, Galaxy A20, Galaxy A10 மற்றும் Galaxy A10s-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும்.

2020 முதல் பாதியில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும் மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் Galaxy J6 மற்றும் Galaxy A20s ஆகும். Galaxy Tab S5e, Galaxy Tab S4 10.5 மற்றும் Galaxy J6+ ஆகியவை ஜூலை 2020 முதல் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும். மேற்கூறிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியீட்டு அட்டவணை, இஸ்ரேலில் உள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy and compact
  • Very good cameras
  • Powerful SoC
  • Bad
  • Gets warm under heavy load
  • Hole-punch design might not appeal to everyone
Display 6.10-inch
Processor Samsung Exynos 9820
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 16-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9.0
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  2. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  3. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  4. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  5. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
  6. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  7. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  8. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  9. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  10. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »