Samsung Galaxy A51-யில் 4,000mAh பேட்டரியும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
Samsung Galaxy A51-ஆனது Galaxy A50s போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது
Samsung Galaxy A51 விவரக்குறிப்புகள் எந்தவொரு முறையான அறிவிப்பிற்கும் முன்பாக வலையதளத்தில் (Web) வெளிவந்துள்ளன. புதிய Samsung Galaxy A-series ஸ்மார்ட்போன் 6.5-inch Super AMOLED டிஸ்பிளே மற்றும் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. Galaxy A51, Android 10 out-of-the-box-ஐ இயக்குவதாகவும், சாம்சங்கின் One UI உடன் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், Samsung Galaxy A51-ன் Geekbench பட்டியல் வெளிவந்தது. இது ஸ்மார்ட்போனில் Android 10 இருப்பதை முன்னிலைப்படுத்தியது. ஆன்லைன் பட்டியலில் ஸ்மார்ட்போன் மாதிரி எண்ணுடன் SM-A515F காட்சிப்படுத்தப்பட்டது.
Samsung Galaxy A51-ன் விவரக்குறிப்புகள் (வதந்தியானவை)
டிப்ஸ்டர் இஷான் அகர்வால் (Tipster Ishan Agarwal), ஆண்ட்ராய்டு-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு டிரய்ட்ஷவுட்டுடன் (DroidShout) இணைந்து Samsung Galaxy A51-ன் முக்கிய விவரக்குறிப்புகளை கசியவிட்டார். பிப்ரவரியில் 6.4-inch full-HD+ Infinity-U டிஸ்ப்ளேவுடன் தொடங்கப்பட்ட Samsung Galaxy A5-ன் தொடர்ச்சியாக, Samsung Galaxy A51, 6.5-inch Super AMOLED டிஸ்ப்ளே பேனலைக் கொண்டிருக்கும் என்று அந்த வட்டாரம் கூறுகிறது. புதிய கைபேசியில் 4,000mAh பேட்டரியும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
பின்புறத்தில், Samsung Galaxy A51-l 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் ஒன்றைக் கொண்டிருக்கும். அதன் முன் பேனலில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் என்று டிப்ஸ்டர் குறிப்பிடுகிறது. ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 2.0 இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Samsung Galaxy A51 ஏற்கனவே நொய்டாவில் உள்ள சாம்சங்கின் உற்பத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது waterdrop-style display notch வரும். மேலும், USB Type-C port, 3.5mm headphone jack மற்றும் பிரத்யேக microSD card slot ஆகியவை இதில் அடங்கும்.
Samsung Galaxy A51-ன் பிராசசரைப் சுற்றி டிப்ஸ்டரில் எந்த விவரங்களும் இல்லை என்றாலும், சமீபத்திய கீக்பெஞ்ச் (Geekbench) பட்டியலை நாங்கள் நம்பினால், அது Exynos 9611 SoC ஆக இருக்கலாம்.
Samsung தனது 2020 range Galaxy A-series மாடல்களில் Galaxy A51-ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. quad rear கேமரா அமைப்பிலும் 12-megapixel wide-angle shooter மற்றும் 2x optical zoom உடன் 12-megapixel telephoto snapper, அதே போன்று 5-megapixel depth சென்சார் ஆகியவை முந்தைய அறிக்கையில் காணப்பட்டது. இருப்பினும், சமீபத்திய வளர்ச்சியில் தெரிவிக்கப்பட்ட 48-megapixel முதன்மை சென்சாருக்கு பதிலாக 32-megapixel முதன்மை சென்சாருடன் வருவதாக வதந்தி பரவியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature