இன்று இந்தியாவில் வெளியாகிறது சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y3 ஸ்மார்ட் போன். ரெட்மி 7 போனும் இன்று வெளியாக வாய்ப்பிருக்கிறது. சியோமி சமூக வலைதளங்களில் வெளியீட்டு விழா நேரலை செய்யப்பட உள்ளது. ரெட்மி Y3-ஐப் பொறுத்தவரையில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, வாட்டர் ட்ராப் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரெட்மி 7 போனை பொறுத்தவரையில், சீனாவில் சென்ற மாதமே ரிலீஸ் ஆகிவிட்டது. 4000 எம்.ஏ.எச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட அம்சங்களை அந்த போன் பெற்றிருக்கிறது.
ரெட்மி Y3-யில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
ஸ்னாப்டிராகன் 625 எஸ்.ஓ.சி, 3ஜிபி ரேம் போன்ற வசதிகளை ரெட்மி Y3 பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் ஏற்கெனவே போனில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என்பதை உறுதி செய்துவிட்டது. அதேபோல சமீபத்தில் வெளியான டீசரில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி இருப்பதையும் யூகிக்க முடிகிறது. போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான் செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வெகு நேரம் பேட்டரி திறன் இருப்பதற்கு சியோமி நிறுவனம் இந்த போனில் பிரத்யேக சாதனத்தைப் பொருத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சியோமி நிறுவனம் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், 4000 எம்.ஏ.எச் பேட்டரியை Y3 போன் பெற்றிருக்கலாம் எனப்படுகிறது.
ரெட்மி Y3 விலை:
ரெட்மி Y2 மற்றும் Y1 ஆகிய போன்கள் முறையே 9,999 ரூபாய் மற்றும் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே ரெட்மி Y3 போனின் விலையும் இதை ஒத்திருக்கலாம் எனப்படுகிறது. இந்த போன் ரெட்மி நோட் 7 மற்றும் ரியல்மி U1 ஆகிய போன்களுடன் சந்தையில் போட்டிபோடும்.
ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:
ரெட்மி 7 போனின் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை சீனாவில் சுமார் 7,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 8,200 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் 10,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டூயல் நானோ சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பைய், 6.26 இன்ச் எச்.டி+ டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவாலகம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும்.
கேமராவைப் பொறுத்தவரை 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவையும் ரெட்மி 7, பின்புறத்தில் பெற்றிருக்கும்.
4ஜி VoLTE, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB, Infrared (IR) blaster, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்