Redmi Turbo 5 7,500mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 1.5K LTPS டிஸ்பிளே, Dimensity 8500 Ultra சிப்செட் ஆகியவை இந்த போனில் இடம்பெறலாம்.
Photo Credit: Redmi
Redmi Turbo 5: 7500mAh, 100W, 1.5K LTPS, Dimensity 8500 Ultra சிப்
Redmi-ல இருந்து வரப்போற ஒரு புது மாடல் பத்தின லீக் தகவல் தான் இப்போ டெக் உலகத்துல ஹாட் டாப்பிக். அதுதான் Redmi Turbo 5. 'Turbo' சீரிஸ்னாலே வேகம் தான் ஹைலைட். ஆனா, இப்போ லீக் ஆகியிருக்க தகவலைப் பார்த்தா, இது வேகத்துல மட்டும் இல்லாம, பேட்டரி, பில்டு குவாலிட்டினு எல்லாத்துலேயும் ஒரு 'டர்போ' அப்டேட் கொடுத்திருக்காங்க! வாங்க, என்னென்ன அம்சங்கள்னு டீடெய்லா பார்க்கலாம்.
இந்த போன்லேயே நமக்கு முதல்ல கண்ணை கவரும் விஷயம், இதோட பேட்டரி தான். Redmi Turbo 4-ல 6,550mAh பேட்டரி இருந்துச்சு. ஆனா, இந்த Redmi Turbo 5-ல அதைவிட பெரியதா, 7,500mAh பேட்டரியை கொடுக்கப் போறாங்கனு டிப்ஸ்டர்கள் சொல்றாங்க. 'இரண்டு நாள் பேட்டரி லைஃப்'னு சொல்றது இனி உண்மையா இருக்கலாம். அவ்வளவு பெரிய பேட்டரிக்கு சார்ஜிங் எப்படி இருக்கும்னு கேட்டா, அதுலையும் கவலை இல்லை. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு. சோ, பெரிய பேட்டரியை டக்குனு சார்ஜ் பண்ணிடலாம்.
டிஸ்பிளேயைப் பொறுத்தவரை, Redmi Turbo 5-ல 6.5 இன்ச் அளவுள்ள 1.5K ரெசல்யூஷன் கொண்ட LTPS ஃபிளாட் டிஸ்பிளே வரலாம். சில தகவல்கள் இது OLED பேனலாகவும் இருக்கலாம்னு சொல்லுது. 1.5K ரெசல்யூஷன்னால, பிக்சல் டென்சிட்டி நல்லா இருக்கும். வீடியோ பார்க்கவும், கேம் விளையாடவும் செம்மையா இருக்கும். இந்த ஃபோனோட உள்ள என்ன சிப்செட் இருக்கும்னு பார்த்தா, இது MediaTek Dimensity 8500-Ultra சிப்செட்டோட வர வாய்ப்பிருக்கு. இது ஒரு சக்தி வாய்ந்த சிப்செட். இது கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங்-ல நல்ல பெர்ஃபாமன்ஸை கொடுக்கும்னு எதிர்பார்க்கலாம்.
Redmi வழக்கமா பிளாஸ்டிக் பாடியைப் பயன்படுத்தும். ஆனா, இந்த Turbo 5-ல ஒரு பெரிய மாற்றமா, மெட்டல் மிட்-ஃப்ரேம் (Metal Mid-Frame) கொடுக்கப் போறதா சொல்றாங்க. இது போனுக்கு ஒரு பிரீமியம் லுக் மற்றும் உறுதியான தன்மையை கொடுக்கும். பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேசும்போது, இந்த போன்ல இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கும்னு லீக் ஆகியிருக்கு. மேலும், இந்த போன் IP68 ரேட்டிங்-ஐ கொண்டிருக்க வாய்ப்புள்ளது. IP68 ரேட்டிங் இருந்தால், தூசி மற்றும் தண்ணீரில் இருந்து போனை பாதுகாக்க முடியும். இது ஒரு மிட்-ரேஞ்ச் ஃபோனுக்கு கிடைக்குற ஒரு பெரிய அப்டேட்னு சொல்லலாம்.
கேமரா டீடெய்ல்ஸ் இன்னும் முழுமையா வரல. ஆனா, இதுல 50MP பிரைமரி கேமரா மற்றும் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கலாம்னு சில தகவல் சொல்லுது. ஆண்ட்ராய்டு 16 (Android 16) உடன் இந்த போன் வெளியாக அதிக வாய்ப்பிருக்கு. இந்த Redmi Turbo 5 மாடல் முதலில் சீனாவில் அறிமுகமாகி, பின்னர் குளோபல் சந்தையில் Poco X8 Pro என்ற பெயரில் வெளியாகலாம்னு தகவல் இருக்கு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Xiaomi Mix 5 Tipped to Launch With Quad Curved Screen, Under-Display Selfie Camera With 3D Facial Recognition