Redmi Turbo 4 செல்போன் இங்க என்ன சொல்லுது? வாங்குன்னு சொல்லுதா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஜனவரி 2025 14:22 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Turbo 4 ஆனது 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் கொண்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 உடன் வருகிறது
  • Redmi Turbo 4 ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

ரெட்மி டர்போ 4 லக்கி கிளவுட் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் ஷாலோ சீ ப்ளூ நிறங்களில் வருகிறது

Photo Credit: Redmi

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi Turbo 4 செல்போன் பற்றி தான்.

Redmi Turbo 4 சீனாவில் ஜனவரி 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. MediaTek Dimensity 8400-Ultra சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,550mAh பேட்டரியை இந்த செல்போன் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த செல்போனில் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் 1.5K OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் 2.0 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

Redmi Turbo 4 விலை, கிடைக்கும் தன்மை

சீனாவில் Redmi Turbo 4 விலை 12GB ரேம் + 256GB மெமரி மாடல் சுமார் ரூ. 23,500 தொடங்குகிறது. அதே நேரத்தில் 16GB + 256GB மாடல் ரூ. 25,800, 12GB + 512GB மற்றும் 16GB + 512GB மாடல்கள் முறையே ரூ. 27,000 மற்றும் ரூ. 29,400 என்கிற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது Xiaomi China e-store வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. மூன்று வண்ண விருப்பங்களில் வந்துள்ளது. அவை லக்கி கிளவுட் ஒயிட், ஷேடோ பிளாக் மற்றும் ஷாலோ சீ ப்ளூ ஆகும்.

Redmi Turbo 4 அம்சங்கள்

Redmi Turbo 4 ஆனது 6.67-இன்ச் 1.5K தெளிவு திறன் கொண்ட OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம், 1,920Hz PWM டிம்மிங் வீதம், 2,560Hz வரை உடனடி டச் சாம்ப்ளிங் ரேட், 20 பிரகாச நிலை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு இருக்கிறது. இது HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்ட் உடன் வருகிறது.

Redmi Turbo 4 செல்போன் 4nm ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400-அல்ட்ரா SoC உடன் Mali-G720 MC6 GPU மூலம் இயக்கப்படுகிறது. 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட இந்த சிப்செட் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 உடன் இயக்கப்படுகிறது.

கேமரா பொறுத்தவரையில் Redmi Turbo 4 ஆனது 1/1.95-inch 50-megapixel Sony LYT-600 முதன்மை பின்புற சென்சார் கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஷூட்டர் கேமராவை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கத்தில் 1/4-இன்ச் 20-மெகாபிக்சல் OV20B சென்சார் கேமரா கிடைக்கிறது. இந்த செல்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. IP66+IP68+IP69 என்கிற அளவுக்கு பாதுகாப்பு மதிப்பீடுகளை பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.