Photo Credit: Weibo/ Redmi
இந்தியாவில் ரிலீஸ் ஆகப்போகும் எந்த ரெட்மி போனில், பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது
சியோமி நிறுவனம், தான் அடுத்து வெளியிட உள்ள ரெட்மி ஸ்மார்ட் போனில் ‘பாப்-அப் செல்ஃபி' கேமரா வசதியுடன் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வீபோ (Weibo) வலைதளத்தில் சியோமி வெளியிட்ட வீடியோவில், ரெட்மி போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா இருப்பது தெரிய வந்துள்ளது.
டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தகவல் குறித்து சியோமியின் மனு குமார் ஜெயின், ‘அடுத்து வரவுள்ள ரெட்மி போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்.ஓ.சி ப்ராசஸர் இருக்கும்' என்று மட்டும் கூறியுள்ளார்.
குவால்கம் நிறுவனம், சமீபத்தில்தான் ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி ஆகிய ப்ராசஸர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 730ஜி ப்ராசஸர், சாம்சங் கேலக்ஸி A80 போனில் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் அந்த போன் இந்திய சந்தைக்கு வரவில்லை.
இந்நிலையில் ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா இருக்கும் என்று பரபரக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவலை சியோமி நிறுவனமே மறுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் ரிலீஸ் ஆகப்போகும் எந்த ரெட்மி போனில், பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. அதை பொறுத்திருந்துதான் அறிய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்