இந்தியாவில் ரெட்மி நோட் 7 விரையில் வெளியாகும் என்ற செய்தியை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
எம்.ஐ.யு.ஐ குழு சார்பாக வெளியான அறிக்கையின் படி ரெட்மீ நோட் 7 போனுக்கு புதிதாக சூப்பர் நையிட் சீன் அமைப்பு கொண்ட புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து சியோமி நிறுவனம் சார்பாக இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூப்பர் நையிட் சீன் கேமரா மோட் முதலில் சியோமியின் எம்ஐ மிக்ஸ் 3 என்னும் ஸ்மார்ட்போனுடன் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. 10 8.11.7 என்னும் அப்டேட் உடன் வந்த இந்த புதிய மோட் ஹெச்டிஆர் வகை போட்டோக்களை லோலையிட்டில் எடுக்க உதவுகிறது.
இதன் மூலம் புகைப்படங்களை தெளிவாக எடுக்க உதவுகிறது. நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து சியோமி எம்ஐ 8 மற்றும் எம் ஐ மிக்ஸ் 2 எஸ் என்னும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக ரெட்மீ நோட் 7 ஸ்மார்ட்போனுக்கும் கிடைத்துள்ளது.
சீனாவில் வரும் ஜனவரி 29 ஆம் தேதி மேலும் ஓரு ஃப்ளாஷ் சேலை தொடங்க முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் எப்படியாவது 1 மில்லியன் யுனிட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
இது குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படத்தை எடுக்க உதவுகிற வகையில் செயல்படுவதால் அதன் செயல்பாடுகளை குறித்த சோதனைகள் முடிவடைந்து நோட் 7 ஸ்மார்ட்போனில் இணைகிறது. இரண்டு கேமராக்களுடன்,48 மெகா பிக்சல் சென்சார் வசதியுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 10,200 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்