ஷாவ்மி கடந்த வாரம் இந்தியாவில் ரெட்மி நோட் 9 புரோ மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஃபிளாஷ் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் முதல் ஃபிளாஷ் விற்பனை மார்ச் 25-ஆம் தேதி (நாளை) நடைபெறவிருந்தது. இருப்பினும், பல மாநிலங்கள் முடக்கம் காரணமாக, 'மேக்ஸ்' விற்பனையை மறு தேதிக்கு ஒத்திவைக்க ஷாவ்மி முடிவு செய்துள்ளது. நாட்டில் கோவிட்-19 நோய் மேலும் பரவாமல் தடுக்க இந்த முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
Redmi Note 9 Pro Max விற்பனை மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் ட்வீட் செய்துள்ளார். ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் இப்போது விற்பனைக்கு வரும் சரியான தேதியை அவர் வெளியிடவில்லை, ஆனால் மாநில முடக்கம் காரணமாக முதல் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். Redmi Note 9 Pro விற்பனை திட்டமிட்டபடி நடைபெறும். அமேசான் இந்தியா, ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளமான எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டுடியோ ஸ்டோர்ஸ் வழியாக இந்த இந்த போன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். ரெட்மி நோட் 9 ப்ரோ Aurora Blue, Glacier White மற்றும் Interstellar Black கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
நினைவுகூர, இந்தியாவில் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999-யாகவும், 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோவின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ், MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவை 20: 9 விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த போன், 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC-யா இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை.
மேலும், போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் குவாட் கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 119 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். RAW புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவும் உள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, Infrared (IR), NavIC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
மறுபுறம், ரெட்மி நோட் 9 ப்ரோ, டூயல்-சிம் (நானோ), 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது மற்றும் சமீபத்திய MIUI பதிப்பைக் கொண்டுள்ளது.
ஹூட்டின் கீழ், அட்ரினோ 618 ஜி.பீ.யு மற்றும் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் ஆகியவற்றுடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC உள்ளது. கூடுதலாக, ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். depth sensing-கிற்காக நான்காவது 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் உள்ளது.
முன் பக்கத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களை ஆதரிக்கும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,020 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்