ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 புரோ ஆகியவை வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு புதிய ரெட்மி நோட் போன்களும் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகின்றன. அறிமுக லைவ் ஸ்ட்ரீமின் போது, ஷாவ்மி இந்தியாவில் இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான ரெட்மி சாதனங்களை விற்றதாகக் கூறியது. புதிய ரெட்மி நோட் சீரிஸை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் வரிசையை மேலும் வளர்க்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்தியாவில் Redmi Note 9 Pro Max -ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.14,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.16,999-யாகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, இந்தியாவில் Redmi Note 9 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.15,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ இரண்டுமே Aurora Blue, Glacier White மற்றும் Interstellar Black கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன. ரெட்மி நோட் 9 ப்ரோ மார்ச் 17-ஆம் தேதியும், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மார்ச் 25-ஆம் தேதியும் விற்பனைக்கு வரும். இந்த போன்கள் ஆரம்பத்தில் Amazon, Mi.com, Mi Home stores மற்றும் Mi Studio stores வழியாக வாங்குவதற்க்உ கிடைக்கும். இருப்பினும், இவை இரண்டும் நாட்டின் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் கிடைக்கும்.
Xiaomi, ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகியவற்றின் வெளியீட்டு சலுகைகளை மார்ச் 16-ஆம் தேதி வெளியிடும்.
டூயல்-சிம் (நானோ) ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், MIUI 11 உடன் Android 10-ல் இயக்குகிறது மற்றும் 6.67 இன்ச் முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது பின்புறம் மற்றும் முன் மற்றும் பின்புற கேமரா அமைப்பில் கிடைக்கிறது. மேலும், இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 720G SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு 8 ஜிபி LPDDR4X ரேம் உள்ளது.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் குவாட் கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 119 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ ஃபோவ்) லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார். இதில், RAW புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவும் உள்ளது. மேலும், போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, Infrared (IR), NavIC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. இது 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தவிர, இந்த போன் 8.81 மிமீ தடிமன் கொண்டதாகும்.
டூயல்-சிம் (நானோ) ரெட்மி நோட் 9 ப்ரோ MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Adreno 618 GPU மற்றும் 6 ஜிபி வரை LPDDR4X ரேம் ஆகியவற்றுடன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 720G SoC உள்ளது.
இந்த போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், f/1.79 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL GM2 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 120 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் depth sensing-கிற்காக 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களை ஆதரிக்கும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் உள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NavIC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சென்சாருடன் வருகிறது, மேலும், bottom-firing ஸ்பீக்கர்கள் மற்றும் சத்தம் ரத்துசெய்யும் ஆதரவுடன் இரட்டை மைக்ரோஃபோன்கள் உள்ளன.
ரெட்மி நோட் 9 ப்ரோ, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, இந்த போன் 165.7x76.6x8.8 மிமீ அளவு மற்றும் 209 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்