ரெட்மி நோட் 9-ன் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.
ரெட்மி நோட் 9, 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வருகிறது
ரெட்மி நோட் 9 புரோ மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மலேசியாவில் ரெட்மி நோட் 9 எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீரிஸில் நான்காவது போனான ரெட்மி நோட் 9-ஐ ஷாவ்மி அறிமுகப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற உலகளாவிய வெளியீட்டு நிகழ்விலிருந்து ஷாவ்மி இந்த போனை உலகம் முழுவதிலும் முன்னணியில் கொண்டு வந்துள்ளது.
Redmi Note 9-ன் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 199 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.15,100),
அதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 249 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.18,900) ஆகும்.
சீன நிறுவனம் இந்த போனை பச்சை, வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் விற்பனை செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் இந்த போன் மே மாத நடுப்பகுதியில் விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் ரெட்மி நோட் 9 நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேல் MIUI 11-ல் இயக்கும். இந்த போனில் 6.53 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் வருகிறது. செல்பி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
13 New Phones You Can Buy in India Soon After Lockdown is Lifted
இணைப்பிற்கு, இந்த போனில் Wi-Fi, USB Type-C port, Bluetooth, 3.5mm audio jack, NFC, infrared (IR) blaster, GPS, A-GPS
ஆகியவை உள்ளது. போனின் உள்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features