முன்னதாக விலை மற்றும் இந்த ஸ்மார்ட்பொனின் வகைகள் பற்றிய விவரங்கள் வெளியான பிறகு Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் தற்போது கசிந்துள்ளது. முன்னதாகவே சியோமி நிறுவனம்,இந்த Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸர், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4,500mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பதை சியோமி நிறுவனம் உறுதி செய்திருந்தது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4 பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருந்தது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நாளை (ஆகஸ்ட் 29) சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் Redmi Note 8 ஸ்மார்ட்போன், Redmi TV, மற்றும் 14-இன்ச் RedmiBook ஆகியவையும் அறிமுகமாகவுள்ளது. Redmi Note 8 ஸ்னேப்டிராகன் 665 SoC ப்ராசஸர் கொண்டுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது.
வெய்போ தளத்தில் வெளியான சமீபத்திய கசிவு Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களையும் குறிப்பிடுகிறது. அந்த கசிவின்படி, இந்த ஸ்மார்ட்போன் MIUI 10ஐ அடிப்படையாக கொண்ட ஆண்டராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பை கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.53-இன்ச் திரையை கொண்டுள்ளது. Note 7 Pro போலவே இந்த ஸ்மார்ட்போனும், வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது.
6GB மற்றும் 8GB என்ற அளவிலான RAM வகைகளுடன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. சேமிப்பில் 64GB மற்றும் 128GB என இரண்டு அளவுகளை கொண்டுள்ளது. கேமராவை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது.
முன்னதாக சியோமி நிறுவனம் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
முன்னதாக 91Mobiles வெளியிட்ட கசிவுகளின்படி, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவுடன் 1,799 யுவான்கள் (சுமார் 18,000 ரூபாய்) என்ற விலையிலும், 8GB RAM + 128GB சேமிப்பு வகை 2,099 யுவான்கள் (சுமார் 21,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4GB RAM + 64GB சேமிப்பு வகையில் 1,199 யுவான்கள் (சுமார் 12,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் உறுதியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்