இந்தியாவில் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro அக்டோபர் 21-ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.
Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8 குவாட் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திலேயே ஜியோமி ஒரு மில்லியன் யூனிட் Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனத்தின் இந்திய யூனிட் தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஜியோமியின் ரெட்மி நோட் சீரிஸின் ஒரு பகுதி, Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வின் வெற்றி மிகவும் ஆச்சரியமல்ல. ஏனெனில், பாரம்பரியமாக எல்லா ரெட்மி நோட்-சீரிஸ் தொலைபேசிகளும் நாட்டில் நன்றாக விற்பனையாகியுள்ளன. நினைவுகூர, ஜியோமி அக்டோபர் நடுப்பகுதியில் Redmi Note 8 and Redmi Note 8 Pro-வை அறிமுகப்படுத்தியது. மேலும், போன்கள் அக்டோபர் 21 அன்று முதலில் விற்பனைக்கு வந்தன.
Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro போன்களால் அடையப்பட்ட விற்பனை மைல்கல்லை, ஜெயின் ட்விட்டரில் அறிவித்தார். இதற்கிடையில், நிறுவனம் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மற்றொரு Redmi Note 8 Pro ஃபிளாஷ் விற்பனைக்கு நிறுவனம் தயாராகி வருகிறது. இன்று ஃபிளாஷ் விற்பனையைப் பெற்ற Redmi Note 8 அடுத்த வாரம் மீண்டும் விற்பனைக்கு வைக்கப்படும்.
இந்தியாவில் Redmi Note 8, Redmi Note 8 Pro-வின் விலை
Redmi Note 8-ன் 4GB + 64GB மாடல் ரூ. 9,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது. அதேசமயம் போனின் 6GB + 128GB மாடல் ரூ. 12,999-யாக விலையிடப்பட்டுள்ளது. மறுபுறம், Redmi Note 8 Pro-வின் 6GB + 64GB மாடலின் விலை ரூ. 14,999-யாகவும், 6GB + 128GB மாடலின் விலை ரூ. 15,999-யும் மற்றும் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 17,999-யாகவும் உள்ளது. இந்த இரண்டு போன்களும் Amazon, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வழங்கப்படுகின்றன.
Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8-ல், 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே, Qualcomm Snapdragon 665 SoC, 6GB RAM, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் மற்றும் பிரத்யேக microSD card வழியாக (512GB வரை) விரிவாக்ககூடியது. கூடுதலாக, Redmi Note 8, quad rear கேமரா அமைப்பில், f/1.79 aperture உடன் 48-megapixel primary shooter, 120-degree field of view மற்றும் f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle shooter மற்றும் f/2.4 aperture உடன் இரண்டு 2-megapixel கேமராக்கள் (macro மற்றும் depth) ஆகியவை அடங்கும். போர்டில் f/2.0 aperture உடன் 13-megapixel செல்ஃபி கேமரா உள்ளது.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro, Android Pie அடிப்படையிலான MIUI 10-ஐ இயக்குகிறது. இது 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 8GB RAM, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் மற்றும் microSD card slot உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் quad rear கேமரா அமைப்பில் f/1.89 aperture உடன் 64-megapixel primary shooter, ultra-wide-angle f/2.2 lens உடன் 8-megapixel shooter மற்றும் இரண்டு 2-megapixel கேமராக்கள் (macro மற்றும் depth) ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகளுக்காக 20-megapixel கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped