Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் 6GB RAM + 64GB சேமிப்பை கொண்ட அடிப்படை வகை 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
Redmi Note 8 Pro மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டுள்ளது
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் தனது முதல் விற்பனையை சந்தித்தபோது 3 லட்சம் என்ற விற்பனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. சியோமியின் இந்த ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக, ஆகஸ்ட் 29-ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விற்பனை செப்டம்பர் 3-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த விற்பனையில் 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்த தகவலை ரெட்மியின் தலைமை நிர்வாக அதிகாரி லூ வெய்பிங், தனது வெய்போ கணக்கு மூலம் தெரிவித்துள்ளார். இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை செபடம்படர் 6-ஆம் தேதி அன்று நடைபெறும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் FHD+ திரை, நான்கு பின்புற கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 4,500mAh பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸர், வாட்டர்-ட்ராப் நாட்ச் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
கடந்த வாரத்தில் இந்த ஸ்மார்ட்போனுடன் Redmi Note 8 ஸ்மார்ட்போனும் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை செப்டம்பர் 17-ல் சந்திக்கவுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை பொருத்தவரை 6GB RAM + 64GB சேமிப்பை கொண்ட அடிப்படை வகை 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 128GB மற்றும் 8GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,599 யுவான்கள் (16,000 ரூபாய்) மற்றும் 1,799 யுவான்கள் (18,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை (Pearl White), மரகதம் (Ice Emerald), மற்றும் சாம்பல் (Electric Light Grey) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் இரண்டு நானோ சிம் வசதி கொண்டு, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. இது மட்டுமின்றி கேமிங் அனுபவத்தை கணக்கில் கொண்டு, இந்த ஸ்மார்ட்போனில் கேம் டர்போ 2.0 மோட் (Game Turbo 2.0 mode) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்றபடி Redmi Note 8 ஸ்மார்ட்போனை போன்றே 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என மிதமுள்ள மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery