ரெட்மி நோட் 7 ப்ரோ, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது
ரியல்மி 3 ப்ரோ போனில், ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான சப்போர்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போன், ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட்டை விரைவில் பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் ‘ரியல்மி 3 ப்ரோ' ஸ்மார்ட் போனை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், இந்தத் தகவலை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ போனில், ஃபோர்ட்நைட் வீடியோ கேமிற்கான சப்போர்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து சியோமி நிறுவனம், ‘ஃபோர்ட்நைட் கேமிற்கான சப்போர்ட் பற்றி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ரெட்மி நோட் 7 ப்ரோ-விற்கு இருப்பது குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 ப்ராசஸர் ஆகும். இது புதிய சிப்செட் வகையாகும். ஃபோர்ட்நைட்டின் முக்கிய சந்தையான அமெரிக்காவிலேயே இந்த சிப்செட் ரிலீஸ் ஆகவில்லை. எனவே ஃபோர்ட்நைட் கேமை உருவாக்கியவர்கள் இந்த சிப்செட்-ஐ சோதனை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் ஸ்னாப்டிராகன் ப்ராசஸருக்கு சான்றிதழ் வாங்க முடியவில்லை' என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
சான்றிதழ் வாங்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பதில் தெளிவில்லை. ஆட்ரினோ 530 அல்லது அதற்கு மேல் திறன் கொண்ட ப்ராசஸர் இருந்தால் அது ஃபோர்ட்நைட் கேமிற்கு ஏற்றதாக இருக்கும். ரெட்மி நோட் 7 ப்ரோ பெற்றிருப்பதோ, ஆட்ரினோ 612 GPU ஆகும். எனவே ஃபோர்ட்நைட் சப்போர்ட் வாங்குவது கடினமானதாக இருக்காது.
ரெட்மி நோட் 7 ப்ரோ, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பப்ஜி மொபைல் கேமிற்கு இந்த போனில் சப்போர்ட் இருந்தது. ஆனால், இன்னொரு மிகவும் பிரபலமான மொபைல் வீடியோ கேமான ஃபோர்ட்நைட்டிற்கு நோட் 7 ப்ரோ-வில் சப்போர் இல்லை. இதனை பயன்படுத்தி போட்டி நிறுவனமான ரியல்மி, ரியல்மி 3 ப்ரோ-வில், ஃபோர்ட்நைட் கேமிற்கு சப்போர்ட் இருக்கும்படி போனை உருவாக்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?