Redmi Note 7 Pro sale: ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது, சமீபத்தில் அப்டேட்டை பெற்றது.
Redmi Note 7 Pro: ரெட்மியின் 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களும் இன்று விற்பனைக்கு வருகின்றன.
ரெட்மி நோட் 7 ப்ரோ(Redmi Note 7 Pro) ஸ்மார்ட்போன் இன்று மற்றுமொரு பிளாஷ் சேல் விற்பனையில் கிடைக்கிறது. கடுமையான டிமாண்டில் இருக்கும் சியோமி நிறுவனத்தின் இந்த போன் Mi.com, Flipkart, மற்றும் Mi Home Stores ஆகியவற்றில் 12 மணி முதல் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி + 128ஜிபி) மாடல் ஸ்மார்ட்போனாது, கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் விற்பனைக்கு வெளியாகியன. அதே போனின் இந்த புதிய மாடல் ஏற்கனவே இந்தியாவில், கடந்த ஏப்.10ஆம் தேதி பிளாஷ் சேலில் விற்பனைக்கு வந்தது.
6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன், ரூ.19,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் வெளியான சில மணிநேரங்களில் இந்த தயாரிப்பு விற்பனையாகிவிடும் என எதிர்பார்கப்படுகிறது.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை:
ரூ.13,999க்கு ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதியுடை மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வசதியுடை) மாடல் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு தயாரிப்புகளுமே நேப்டியுன் ப்ளூ, நேபுலா ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
சியோமியின் இந்த புதிய தயாரிப்புக்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் 1,120ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற காலிங் வசதியை 'ஏர்டெல் தேங்ஸ்' சேவை மூலம் வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் சியோமியின் இந்த தயாரிப்புடன் 'டபுள் டேட் ஆஃபர்' வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரூ.198க்கு மேல் ரீசார்ஜ் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:
ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம் பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி வசதிகளையும் இந்த போனும் பெற்றுள்ளது.
மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதற்நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 4,000mAh பேட்டரி பவர், குயிக் சார்ஜ் சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற பல அப்டேட்களை இந்த போன் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features