ரெட்மீ நோட் ப்ரோ 7 விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது. சீனாவில் இம்மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் துணை பிராண்டாக ரெட்மீ ஆன பிறகு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன்.
சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவரான மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான லீ ஜூன் உடன் ரெட்மீ நோட் 7 வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் அப்புகைப்படத்தில் நோட் 7 வெளியாகும் தேதியும் தலைகீழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10,500 ரூபாய்க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற ரெட்மீ நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி நினைவகத்துடன் வெளியாகுகிறது. 48 மெகா பிக்சல் கேமராவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற சீன புத்தாண்டையொட்டி விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 675 எஸ்ஓசி பிராஸசருடன் இயங்கும் இந்த நெட் மீ நோட் 7 ப்ரோ ரூபாய் 15,700 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகி அசத்திய ரெட் மீ நோட் 6 ப்ரோவுக்கு பிறகு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்