சீனாவில் கடந்த வாரம் ரெட்மீ நோட் 7 அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட்மி நிறுவனம் தனது தயாரிப்பில் புதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனை சுமார் 1 மில்லியன் யூனிட்டுகள் வரை, வெளியான ஓரே மாதத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஆன்லைன் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தேவையான அளவு ரெட்மியின் புதிய போன்களை தயாரித்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, சியோமியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வான் தெங் இந்த தகவலை அளித்துள்ளார்.
ஒரு மில்லியன் போன்களை விற்பனை செய்வது சியோமி நிறுவனத்திற்கு பெரிய சாதனை இல்லை என்றாலும் சமீபகாலமாக சியோமி நிறுவனத்தின் போன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சீன சந்தைகளில் இதுபோன்ற சாதனைகள் பலவற்றை செய்திருந்தாலும் இம்முறை 1 மில்லியன் போன்கள் விற்பதையே அவர்களது குறிக்கோளாக வைத்துள்ளனர்.
மேலும் அவர் தனது மற்றொரு பதிவில், எம்ஐ நிறுவனம் இனி தொழிநுட்பத்தில் சிறந்த போன்களை மட்டுமே தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். எம்ஐ 8 ஸ்மார்ட்போன் வெளியாகபோகும் நிலையில் அதற்கான அப்டேட்களை தயாரித்து வருகிறது எம்ஐ நிறுவனம். சுமார் 22,000 ரூபாய் முதல் 28,500 ரூபாய் வரை இந்த எம்ஐ8 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகறிது.
ரூபாய் 10,200 க்கு விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளேவுடன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி பிராஸ்சரால் செயல்படுகிறது. மேலும் 6 ஜிபி ரேமும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி நினைவகத்தை கொண்டது.
அத்துடன் இருபுற கேமரா வசதி மற்றும் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செக்கன்டரி சென்சாருடன் இயங்குகிறது. சீனாவில் 8 நிமிடம் மட்டுமே இருந்த ஃபிளாஷ் சேலில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டதால் எவ்வளவு விற்கப்பட்டது என இன்னும் தகவல் தெரியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்