ஐடிசி-யின் கணிப்பின்படி, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சியோமி கியூ3 என்ற மதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்ச்சியாக ஐந்தாவது காலாண்டில் முன்னணி இடத்தை தக்கவைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சீன நிறுவனமான சியோமி இந்தியாவில் மூன்று போன்களின் விலையை குறைத்துள்ளது.
இதுகுறித்து சியோமி இந்தியாவின் தலைவர் மனு குமார் ஜெயின் பேசுகையில், சியோமி எம்.ஐ2, சியோமி ரெட்மி ஒய்2 மற்றும் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோவின் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நவம்.22 ஆம் தேதி ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகமாவதை உறுதி செய்துள்ளார்.
சியோமி எம்.ஐ ஏ2, சியோமி ரெட்மி ஒய்2 மற்றும் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஆகிய மூன்று போன்களின் விலையில் ரூ.1000-த்தைக் குறைத்துள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ 4ஜிபி ரேம்+64ஜிபி ஸ்டோரேஜ் போன் தொடக்கத்தில் ரூ.14,999 ஆக இருந்தது. தற்போது ரூ. 13,999 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 6ஜிபி ரேம்+64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் தொடக்கத்தில் ரூ. 16,999 ஆக இருந்தது தற்போது ரூ. 15,999 ஆக குறைந்துள்ளது.
சியோமி எம்.ஐ2 4ஜிபி ரேம்+64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆரம்பத்தில் ரூ.16,999 ஆக இருந்தது. தற்போது ரூ.15,999 ஆக குறைந்துள்ளது. சியோமி எம்.ஐ ஏ2 6ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் முதலில் ரூ.19,999 ஆக இருந்தது தற்போது ரூ.18,999 ஆகும். சியோமி ரெட்மி ஒய்2 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ. 12,999 லிருந்து ரூ. 11,999 ஆக குறைந்துள்ளது. இந்த புதிய விலை பட்டியல் இன்று மதியத்திலிருந்து அமல்படுத்தப்படும் என்று சியோமி அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்