Redmi K90 Pro Max மற்றும் K90 சீரிஸ் மொபைல்கள் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் Bose நிறுவனத்தின் சிறப்பு ஆடியோ அனுபவத்துடன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது
Photo Credit: Redmi
ரெட்மி கே 90 ப்ரோ மேக்ஸ் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது
நீங்க ஒரு Redmi ஃபேன்-ஆ இருந்தா, இந்த செய்தி உங்களை சும்மா ஷாக் ஆக்கும். ஏன்னா, Redmi-ல இருந்து ஒரு படு பயங்கரமான ஃப்ளாக்ஷிப் மாடல் இப்போ லான்ச் ஆகிருக்கு. அதான் நம்ம Redmi K90 Pro Max மற்றும் அதோட தம்பி Redmi K90. இந்த ரெண்டு போன்ஸோட பெரிய ஹைலைட்டே, ஆடியோ கம்பெனியிலயே கிங்-ஆ இருக்கிற Bose தான்! ஆமாங்க, Redmi-யும் Bose-ம் சேர்ந்து இந்த போன்ல ஸ்பீக்கரை டியூன் பண்ணியிருக்காங்க! அதுலயும் Pro Max மாடல்ல, 2.1 சேனல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (ஒரு வூஃபரோட சேர்த்து!) கொடுத்திருக்காங்க. ஒரு மொபைல்ல இந்த மாதிரி சவுண்ட் செட்டப் வருதுன்னா, ஆடியோ ஃபீல் சும்மா வேற லெவல்ல இருக்கும் நண்பா! கேம் விளையாடுறவங்களுக்கு, சினிமா பார்க்கிறவங்களுக்கு இது ஒரு பெரிய விருந்து.
அடுத்து, பெர்ஃபார்மன்ஸ் பத்தி பேசலாம். Redmi K90 Pro Max-ல Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்-அ போட்டிருக்காங்க! இது 3nm ப்ராசஸர். அதாவது, ஸ்பீட்-ல இதுக்கு மிஞ்ச வேற ஆளே இல்லைனு சொல்லலாம். நீங்க என்னதான் பெரிய கேம் போட்டாலும், இது ஸ்மூத்தா இழுத்துட்டு ஓடும். கூடவே, 16GB LPDDR5x RAM, 1TB UFS 4.1 ஸ்டோரேஜ்னு தரமான காம்போ இருக்கு.
டிஸ்ப்ளே-வப் பார்த்தா, K90 Pro Max-ல ஒரு பெரிய 6.9-இன்ச் OLED ஸ்க்ரீன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,500 nits பீக் ப்ரைட்னஸ்னு கண்ணை பறிக்கும் அளவுக்கு கொடுத்திருக்காங்க. வெளிச்சத்துல கூட கிரிஸ்டல் கிளியரா தெரியும்.
கேமராவைப் பத்தி சொல்லவா வேணும்? பின்னாடி மூணுமே 50 மெகாபிக்ஸல் கேமரா தான்! 50MP மெயின் கேமரா (OIS), 50MP பெரிய ஸூம் (Periscope) லென்ஸ் (5x ஆப்டிகல் ஸூம்!), 50MP அல்ட்ராவைடு கேமரானு ஒரு ட்ரிபிள் ஷாட் கொடுத்திருக்காங்க. முன்னாடி 32MP செல்ஃபி கேமரா. 8K வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷனும் இருக்கு.
பேட்டரி விஷயத்துல, Pro Max-ல 7,560mAh பேட்டரியும், 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கும், 50W வயர்லெஸ் சார்ஜிங்கும் இருக்கு. இந்த சார்ஜிங் ஸ்பீடால, போன் சீக்கிரமே சார்ஜ் ஆகிடும். பாதுகாப்புக்கு இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் சென்சார் இருக்கு. போன் Android 16-அ அடிப்படையாகக் கொண்ட HyperOS 3-ல இயங்குது.
சரி, இப்போ தம்பி K90-ஐப் பார்ப்போம். இதுல போன வருஷத்து Snapdragon 8 Elite சிப்செட் இருக்கு. பேட்டரி 7,100mAh. டிஸ்ப்ளே 6.59-இன்ச் OLED. கேமரா செட்டப் Pro Max-அ விட கொஞ்சம் குறைவு (50MP+50MP+8MP) தான். பட், இதுவும் பவர்ஃபுல்லான போன் தான்.
விலையைப் பத்தி பேசினா, Redmi K90 Pro Max சைனால ஆரம்ப விலையா சுமார் ₹49,000/- ரூபாய்-ல இருந்து வருது (CNY 3,999). டாப் வேரியண்ட் சுமார் ₹65,000/- வரை போகுது. Redmi K90 மாடல் சுமார் ₹32,000/- ரூபாய்-ல இருந்து ஆரம்பிக்குது. இந்த போன்கள் சீக்கிரம் இந்தியாவுக்கு வந்தா, மார்க்கெட்டே அதிரும்! நீங்க இந்த போன்ஸை வாங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications