புதிய பதிப்புடன் வருகிறது ரெட்மி கே 30. இந்த போனில் முன்பை விட சக்திவாய்ந்த செயலி உள்ளது. ஷாவ்மி இந்த போனை சீனாவில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. ரெட்மி கே 30 5 ஜி ரேசிங் பதிப்பில் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட் உள்ளது. போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில் டூயல் செல்பி கேமரா உள்ளது. இந்த போன் நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.
Redmi K30 5G Racing Edition-ன் விலை 1,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 21,300) ஆகும். இந்த போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும். ஷாவ்மி இந்த போனை மே 14 ஆம் தேதி சீனாவில் விற்பனை செய்யும்.
Redmi K30 5G ரேசிங் பதிப்பில், 6.67 இன்ச் 120Hz டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
போனில் உள்ள கேமராவில் 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் உள்ளது. 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. மேலும், இதில் டூயல் செல்பி கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, போனில் டூயல் பேண்ட் 5 ஜி, வைஃபை, 4 ஜி-எல்டிஇ, புளூடூத், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்