ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் ரெட்மீ இந்தியாவின் ட்விட்டர் கணக்கு முலமாக ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸரின் செயல்பாடு எப்படி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் சென்ற மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 48 மெகாபிக்சல் அளவிலான இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் ஜூலையின் இடையில் அறிமுகப்படுத்தப்படும் என முன்னதாக சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது.
சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில், க் செயல்பாடு எப்படி உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் அன்டுடு (AnTuTu) செயல்பாட்டு மதிப்பெண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வைத்து பார்க்கையில் இந்த ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸரின் செயல்பாடு என்பது, இதற்கு முன் வந்த ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸரின் செயல்பாடை விட 40 சதவிதம் அதிகமாக உள்ளது.
இந்த டீசரில் அன்டுடு (AnTuTu) செயல்பாட்டு மதிப்பெண் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் 218,625 மதிப்பெண்களையும், ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் 180,808 மதிப்பெண்களையும், ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் 155,215 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
முன்னதாகவே, சியோமி இந்தியாவில் தலைமை நிர்வாக அதிகாரியான மனு குமார் ஜெய்ன் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தின் நடுவில் அறிமுகமாகும் என அறிவித்திருந்தார். இந்த ஸ்மாட்ர்போன் சியோமி பிறந்த தேதியான ஜூலை 15 அன்று அறிமுகமாகலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mi fans, you will soon see a device with @Qualcomm Snapdragon 730, one of the first in India. It's >40% faster than SD 710 which is an year old. Yes, you read that right!
— Redmi India (@RedmiIndia) June 27, 2019
Can you guess the name of the phone coming with 730? pic.twitter.com/ZJiUA5IoEE
ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்: எதிர்பார்க்கப்படும் விலை!
முன்னதாக சீனாவில் இந்த ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு 6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியானது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்), 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). இந்த ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களை கொண்டுள்ளது.
ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது. மேலும், 18W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்