. இந்த ஓபன் சேல் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் இன்று மதியம் 12 மணியிலிருந்து துவங்கியுள்ளது.
ஓபன் சேலில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள்
சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்களான ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகியவற்றை ப்ளாஷ் சேலில் பெருவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனென்றால் அந்த ஸ்மார்ட்போன்களுக்கான போட்டி அப்படி. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களை பெறுவதற்கான செயலை சற்று எளிமையாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை ஓபன் சேலில் வைத்துள்ளது சியோமி நிறுவனம். இந்த ஓபன் சேல் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் இன்று மதியம் 12 மணியிலிருந்து துவங்கியுள்ளது.
6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மஎன இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
![]()
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Realme Neo 8 Infinite Edition Launch Timeline, Retail Box Leaked: Expected Specifications, Features
Samsung Galaxy S26 Series Could Support Satellite Voice, Video Calls With Samsung's New Exynos Modem 5410
Amazon Get Fit Days Sale 2026 Announced in India: Check Out Some of the Best Deals