புதிய வண்ணத்தில் 'ரெட்மீ K20 Pro', என்ன நிறம், எப்போது விற்பனை?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 31 ஜூலை 2019 12:14 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நடைபெறுகிறது
  • 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்) என்ற விலையில் ஆக்ஸ்ட் 1-ல் விற்பனை
  • 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகையில் மட்டுமே அறிமுகம்

புதிய வண்ண ரெட்மீ K20 Pro!

ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் 'சம்மர் ஹனி வொய்ட்' (Summer Honey White) என்ற புதிய வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது. சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வண்ணத்திலான ஸ்மார்ட்போன், நாளை அதாவது ஆகஸ்ட் 1 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் சீனாவில் அறிமுகமாகியிருந்தது. வண்ணத்தில் மற்றுமே மாற்றத்தை கொண்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன், முன்னதாக அறிமுகமான ரெட்மீ K20 Pro போன்றே, மூன்று பின்புற கேமரா, பாப்-அப் செல்பி கேமரா, ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர், 4000mAh பேட்டரி என்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மீ K20 Pro 'சம்மர் ஹனி வொய்ட்' விலை

நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில்,  6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.

இந்த வகைகளில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவு வகை மட்டுமே இந்த 'சம்மர் ஹனி வொய்ட்' வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலையிலும் எந்த மாற்றமும் இன்றி 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்) என்ற விலையிலேயே விற்பனையாகவுள்ளது.

இந்த புதிய வண்ண ஸ்மார்ட்போன், Mi CC9 வொய்ட் லவ்வர் ஸ்மார்ட்போன் போன்றே தோற்றமளிக்கிறது.

முன்னதாக சீனாவில், ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க ஐபோன் ஸ்லோவா இருக்கா? இதோ வந்துருச்சு iOS 26.3! புது அம்சங்கள் முதல் பேட்டரி தீர்வு வரை.. முழு விவரம் உள்ளே
  2. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  3. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  4. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  5. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  6. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  7. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  8. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  9. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  10. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.