ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் 27,999 ரூபாய் என்ற விலையிலும், ரெட்மீ K20 ஸ்மார்ட்போன் 21,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாயுள்ளது.
ரெட்மீ K20, K20 Pro இரண்டு ஸ்மார்ட்பபோன்களும் பாப்-அப் செல்பி கேமராக்களை கொண்டுள்ளது
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மீ பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் அடுத்த விற்பனை, இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக ஜூலை 17-ல் அறிமுகமான இந்த ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களுக்கு, ஜூலை ஜூலை 22, ஜூலை 29 என இரண்டு நாட்களில் விற்பனையை நடத்தியிருந்தது சியோமி நிறுவனம். அதுமட்டுமின்றி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்திய 'சூப்பர் ஃப்ளாஷ் சேல்' விற்பனையிலும் இந்த ஸ்மார்ட்போன் இடம்பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போனிற்கான அடுத்த ஃப்ளாஷ் சேல் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் நடைபெறவுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: விலை, சலுகைகள்!
6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், 27,999 ரூபாய் மற்றும் 30,999 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மஎன இரு வகைகளில் 21,999 ரூபாய் மற்றும் 23,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் இந்த விற்பனை நடைபெறவுள்ளது.
ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களை எச்.டி.எஃப்.சி மற்றும் ஆக்சிஸ் வங்கி பஷ் கிரடிட் கார்டுகளுக்கு 5 சதவிகித தள்ளுபடியிலும், ஐசிஐசிஐ கார்டுகள் மூலம் 1,000 ரூபாய் தள்ளுபடியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
அதே நேரம் Mi.com தளத்தில் ஐசிஐசிஐ கார்டுகளை பயன்படுத்தி 1,000 ரூபாய் தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம்.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Hogwarts Legacy 2 Could Feature Online Multiplayer, Warner Bros. Games Job Listing Suggests
Samsung Galaxy S26 Series Said to Feature External Modem on Models With Exynos 2600 SoC
OpenAI Says Prompt Injections a Challenge for AI Browsers, Builds an Attacker to Train ChatGPT Atlas