அயர்ன் மேன், மார்வெல், அவெஞ்சர்ஸ் என பல தீம்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மார்வெல் ஸ்பெஷல் எடிசன்களுடன் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்!
சென்ற மாதம் சீனாவில் வெளியான இந்த 'ரெட்மீ K20 Pro', இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஒரு அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்வெல் ஸ்பெஷல் எடிசன்களுடன் அறிமுகமாகவுள்ளது. அயர்ன் மேன், மார்வெல், அவெஞ்சர்ஸ் என பல தீம்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் அவெஞ்சர்ஸ் லோகோ கொண்ட கிப்ட் பாக்ஸ் ஒன்றுடனும் அறிமுகமாகவுள்ளது. அந்த கிப்ட் பாக்ஸ் அவெஞ்சர்ஸ் பேக் கேஸ் கொண்டிருக்கும்.
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, தனது வெய்போ கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மார்வெல் தீம் கொண்ட 'ரெட்மீ K20 Pro' ஸ்மார்ட்போன் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் கேஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன, எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்தியாவில் அறிமுகமாகிறதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
ரெட்மீ K20 Pro: எதிர்பார்க்கப்படும் விலை!
சீனாவில் நான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.
ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
A Misanthrope Teaches a Class for Demi-Humans To Stream Soon on Crunchyroll