சியோமி நிறுவனத்தின் ரெட்மீ K20 ப்ரோ மற்றும் ரெட்மீ K20 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் இன்று வெளியிடப்பட உள்ளன. இந்த இரண்டு போன்களும் கடந்த மே மாதம், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டு போன்களிலும் 3டி ஆர்க் வகை வடிவமைப்பு, பாப் அப் செல்ஃபி கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மேலும் இந்த K20 ப்ரோ போனில், 855 எஸ்ஓசி ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் உடன் வருகிறது. அதே நேரத்தில் K20 போன், ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி ப்ராசஸருடன் வருகிறது. ஆண்ட்ராய்டு பைய் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன்களில், 256 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும்.
ரெட்மீ K20 ப்ரோ, ரெட்மீ K20 விலை (எதிர்பார்க்கப்படும் விலை):
ரெட்மீ K20 ப்ரோ மற்றும் ரெட்மீ K20 போன்களின் விலையை, இன்றைய அறிமுக விழாவில் சியோமி அறிவிக்கும். ஆனால், இந்த போன்கள் ஏற்கெனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், அந்த விலையை ஒத்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அதற்படி, ரெட்மீ K20 ப்ரோவின், 6ஜிபி + 64 ஜிபி ரேம் வசித கொண்ட போன், 24,900 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படலாம். மேலும் 6ஜிபி + 128ஜிபி ரேம் வசதி கொண்ட K20 ப்ரோவின் விலை 25,990 ரூபாய் இருக்கலாம். 8ஜிபி + 256ஜிபி ரேம் போன், 29,990 ரூபாய் பக்கம் இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ரெட்மீ K20-யின் 6ஜிபி + 64ஜிபி வகை, 19,990 ரூபாய்க்கு விற்கப்படலாம். 6ஜிபி + 128ஜிபி வகை மற்றும் 8ஜிபி + 256ஜிபி வகை, முறையே 20,900 ரூபாய் மற்றும் 25,900 ரூபாய் விலையை ஒத்திருக்கலாம்.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்