இந்த நிகழ்விற்கான ஒரு நுழைவு டிக்கெட்டின் விலை 855 ரூபாய்.
ஆல்பா செலில் விற்பனைக்கு வரவுள்ள ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்கள்
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17-ல் இந்தியாவில் அறிமுகமாகும் என சியோமி அறிவித்ததிலிருந்து, பலரும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சியோமி நிறுவனமோ, நாளுக்கு நாள் இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஒவ்வொரு புதுப்புது அறிவிப்பை வெளியிட்டு அவர்களை அர்வத்துடனே வைத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு தகவலையும் இணைத்துள்ளது சியோமி. இந்த ஸ்மார்ட்போன் சியோமி நடத்தும் ஆல்பா சேலில் அறிமுகமாகவுள்ளதாகவும், அந்த நிகழ்விற்கான டிக்கெட்களை எப்படி பெறுவது, எப்போது விற்பனையாகிறது என்றவாறான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் ஆல்பா சேலிற்கான நுழைவு டிக்கெட்கள் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com ஆகிய தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்விற்கான ஒரு நுழைவு டிக்கெட்டின் விலை 855 ரூபாய். மற்றுமொரு சலுகையாக, இந்த டிக்கெட்டின் மூலம், ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவையும் உறுதி செய்துகொள்ளலாம்.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களுக்கான ஆல்பா சேலில் எப்படி பங்கேற்பது?
1. ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் ஆல்பா சேலிற்கான நுழைவு டிக்கெட்கள் இன்று(ஜூலை 12) மதியம் 12 மணியிலிருந்து விற்பனைக்கு வரவுள்ளது. 855 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள். இதனுடன், இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவையும் உறுதி செய்துகொள்ளுங்கள். முன்பதிவிற்கென தனியாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
2. ஜூலை 17 காலை 8 மணியிலிருந்து, ஜூலை 18 நள்ளிரவு வரை இந்த ஸ்மார்ட்போன்களுக்கான விற்பனை நடக்கும். அந்த நேரத்தில், நீங்கள் செய்த முன்பதிவை வைத்து இந்த ஸ்மார்ட்போன்களை பெற்றுக்கொள்ளலாம்.
3. இந்த ஸ்மார்ட்போன்களை பெற, முதலில் நீங்கள் எங்கு நுழைவுக்கட்டணத்தை பெற்றீர்களோ, ஆப் அல்லது தளம், அதற்குள் செல்லுங்கள். மேலே குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தின் பொழுது இந்த ஸ்மார்ட்போனிற்கான விற்பனை துவங்கியிருக்கும்.
4 அதில், உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போன், எந்த அளவு கொண்டு வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
5. தேர்வு செய்து உள்ளே சென்றால், ஸ்மார்ட்போனின் விலையில் முன்னதாக நீங்கள் நுழைவு டிக்கெட்டிற்காக செலுத்திய 855 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் .மீதி பணத்தை செலுத்தி, அந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான தகவல், இந்த முன்பதிவு உங்களுக்கான ஸ்மார்ட்போனை உறுதி செய்யாது. சியோமி நிறுவனம், ஒரு குறிபிட்ட அளவிலான ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்பனையில் வைக்கவுள்ளது. அதனால், முந்திக்கொள்வது அவசியம்.
இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் எந்த விலையில் விற்பனையாகவுள்ளது என்பதை சியோமி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை!
| ரெட்மீ K30-தொடர் ஸ்மார்ட்போன் | விலை (சீனாவில்) |
|---|---|
| ரெட்மீ K20 (6GB + 64GB) | 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 (6GB + 128GB) | 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 (8GB + 256GB) | 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 Pro (6GB + 64GB) | 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 Pro (6GB + 128GB) | 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 Pro (8GB + 128GB) | 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) |
| ரெட்மீ K20 Pro (8GB + 256GB) | 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) |
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?