சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் இந்த மாதத்தில் அறிமுகமாகும் என சியோமி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாப்-அப் செல்பி கேமராக்கள் கொண்ட ரெட்மீ 'K20, K20 Pro'
புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது ரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரு மாதத்தில் 1 மில்லியன் என்ற விற்பனை எண்ணிக்கையை தொட்டுள்ளது. முன்னதாக சீனாவில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், அறிமுகமான ஒரு மாதத்திலேயே 1 மில்லியன் எண்ணிக்கை அளவுகளில் விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை சியொமியின் சர்வதேச செய்தி தொடர்பாளரான டோனோவன் சங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் இந்த மாதத்தில் அறிமுகமாகும் என சியோமி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம், சியோமியின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று நடைபெறலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கு 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor Robot Phone With Gimbal Camera Arm Spotted in Live Images Ahead of MWC 2026