சியோமி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளான ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி கோ போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பட்ஜெட் போன்களின் விலையில் வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் தங்களது விலைப் பட்டியலில் எந்த ஒரு நிறுவனமும் வழங்காத அமைப்புகளை கொடுத்துள்ளது.
ரூ.4,499க்கு அடிப்படை வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போனான ஆண்ட்ராய்டு கோ மற்றும் 12 மெகா பிக்சல் கேமாரவை கொண்ட ரெட்மி நோட் 7 போன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேபற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது சியோமி நிறுவனம் சார்பில் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களின் கேர்னல் வெர்ஷன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லேவன்டர் மற்றும் தியாரே என்ற புனைப் பெயர்களுடன் இந்த கேர்னல் வெர்ஷன் வெளியாகியுள்ளது.
சில வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி போன்களில் சில மாற்றங்களைச் செய்வது உண்டு. இப்படி நமது தேவைக்கேற்ப ரேம் வசதியைக் கூட்ட குறைக்க கேர்னல் வெர்ஷன் உதவுகிறது. சியோமி நிறுவனம் சார்பில் தற்போது ரெட்மி நோட் 7 கேர்னல் வெர்ஷன் வெளியான நிலையில் ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் கேர்னல் வெர்ஷன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 SoC 3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் மற்றும் 4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி நோட் 7 மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. சியோமியின் மற்றொரு தயாரிப்பான ரெட்மி கோ (1ஜிபி ரேம்/8ஜிபி சேமிப்பு வசதி) ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்