இந்தியாவில் இன்று வெளியாகிறது Redmi 9A, RedmiBook!

ரெட்மி வெளியீடு இன்று மதியம் 12 மணி முதல் Mi.com வலைத்தளம் மற்றும் Redmi மற்றும் Xiaomi சமூக ஊடக சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்தியாவில் இன்று வெளியாகிறது Redmi 9A, RedmiBook!

Redmi 9A இரட்டை செல்ஃபி கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi 8A-க்கு அடுத்தபடியாக Redmi 9A அறிமுகமாகும்
  • ஜியோமி அதன் புதிய வரவுகளை வெளியிடுவதற்கான ஒரு நிகழ்வை ஹோஸ்ட் செய்யவில்லை
  • RedmiBook 13 ஷோஸ்டாப்பராக இருக்க வாய்ப்புள்ளது
விளம்பரம்

Redmi 9A இன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமி துணை பிராண்ட் ரெட்மி கடந்த ஒரு வாரமாக அதன் அறிமுகத்தை கிண்டல் செய்து வருகிறது - எந்த விவரங்களையும் வெளிப்படுத்தாமல். Redmi 9A உடன், வெளியீட்டு நிகழ்வில் ரெட்மி-பிராண்டட் power bank மற்றும் எதிர்பார்க்கப்படும் RedmiBook notebook ஆகியவை நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட RedmiBook 13-ஆக இருக்கலாம். அதிகாரப்பூர்வ வெளியீடு ஒரு இடத்தில் நடைபெறாது, இருப்பினும் இது ஆன்லைன் வீடியோ மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவந்த வரலாற்று சாதனையை ஜியோமி கொண்டுள்ளது. இதனால், சீன நிறுவனத்திடமிருந்து புதிய ஸ்மார்ட்போனாக Redmi 9A எதிர்பார்க்கப்படுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.


Redmi வெளியீட்டு நிகழ்வு: லைவ் ஸ்ட்ரீம் எப்படி பார்ப்பது?

ரெட்மி வெளியீடு இன்று மதியம் 12 மணி முதல் Mi.com வலைத்தளம் மற்றும் Redmi மற்றும் Xiaomi சமூக ஊடக சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய சந்தைக்கு புதிய ரெட்மி என்ன இருக்கிறது என்பதைக் காண நீங்கள் நிச்சயமாக கேஜெட்ஸ் 360 உடன் இணைந்திருக்கலாம்.


இந்தியாவில் Redmi 9A-வின் விலை (எதிர்பார்க்கப்படுபவை):

Redmi 9A-வின் விலை நிர்ணயம் குறித்து எந்த விவரங்களையும் ஜியோமி வெளியிடவில்லை. இருப்பினும், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 8A மற்றும் Redmi 7A ஆகியவற்றைப் பார்த்தால், புதிய ஸ்மார்ட்போன் நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களின் சந்தையை பூர்த்தி செய்ய ரூ. 10,000-க்கு கீழ் இருக்கும்.


Redmi 9, Redmi 9A-வின் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை):

ஜியோமி சமீபத்தில் தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் தனது சமீபத்திய அறிமுகத்தை கிண்டல் செய்து, அதன் இந்தியா தளத்தில் “தேஷ் கா டும்தார் ஸ்மார்ட்போன்” என்ற கோஷத்துடன் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டை உருவாக்கியது. இது கடந்த காலத்தில் Redmi 6A, Redmi 7A மற்றும் Redmi 8A ஆகியவற்றுடன் தொடர்புடைய டேக்லைன்ஸைப் போலவே இருக்கிறது, இதனால், Redmi 9A அறிமுகப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. மைக்ரோசைட்டில் கிடைக்கும் டீஸர்களில் ஒன்று இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், Realme C3-யில் இடம்பெற்ற MediaTek Helio G70 SoC-க்கு ஏற்ப ஒரு பிராசசருடன் இந்த போன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் Redmi power bank விலை (எதிர்பார்க்கப்படுபவை):

இந்தியாவில் Redmi power bank-ன் உத்தியோகபூர்வ விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம், 10,000mAh மற்றும் 20,000mAh திறன் கொண்ட தனது power bank-க்குகளை ரெட்மி சீனாவில் அறிமுகப்படுத்தியது. இரண்டுமே இல்லையென்றால், அந்த இரண்டு power bank-க்குகளில் ஒன்று இன்றைய துவக்கத்தில் அறிமுகமாகும்.

10,000mAh திறன் கொண்ட Redmi power bank CNY 59 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 602) விலையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் 20,000mAh திறனின் விலை CNY 99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,000) ஆகும். இந்தியாவில் தனது power bank தொடங்குவதற்கு நிறுவனம் இதேபோன்ற விலை நிர்ணய கட்டமைப்பைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Redmi power bank விவரக்குறிப்புகள்:

புதிய தயாரிப்பு "மென்மையான, நளினமான, சக்திவாய்ந்ததாக" இருக்கும் என்று டீஸரில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜியோமி இதுவரை எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. சீனாவில் தொடங்கப்பட்ட இரண்டு ரெட்மி power bank-க்குகள் USB Type-C port உடன் அறிமுகமாயின. power bank-க்குகளில் ஒரு Micro-USB port மற்றும் இரண்டு USB Type-A ports-களும் அடங்கும். 20,000mAh திறன் கொண்ட ஒன்று 5V மற்றும் 2A, 9V மற்றும் 2.1A மற்றும் 12V மற்றும் 1.5A ஆகியவற்றின் உள்ளீட்டு மதிப்பீட்டையும், 5.1V மற்றும் 2.4A, 9V மற்றும் 2A மற்றும் 12V மற்றும் 1.5A என மதிப்பிடப்பட்ட வெளியீட்டையும் வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது.


இந்தியாவில் RedmiBook 13 விலை (எதிர்பார்க்கப்படுபவை):

RedmiBook எதிர்பார்க்கப்படும் வெளியீடு சமீபத்திய டீஸர் வீடியோ பரிந்துரைத்தது. ஜியோமி கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட RedmiBook 13-ஆக இருக்கலாம். இது CNY 4,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 42,900) ஆரம்ப விலையைக் கொண்டுள்ளது, இது RedmiBook-ன் இந்தியாவின் விலைக்கு ஏற்ப இருக்கலாம்.

RedmiBook 13 உடன், ஜியோமி தனது RedmiBook போர்ட்ஃபோலியோவின் கீழ் இரண்டு ஆப்ஷன்களாக RedmiBook 14 Pro மற்றும் RedmiBook 14-ஐக் கொண்டுள்ளது. இருப்பினும், அந்த இரண்டும் இன்றைய வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பில்லை.


RedmiBook 13 விவரக்குறிப்புகள்:

RedmiBook 13, 13.3-இன்ச் full-HD anti-glare டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 10th generation Intel Core processor மூலம் இயக்கப்படுகிறது. notebook-ல் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். மேலும், புதிய ரெட்மிபுக்கின் வர்த்தக முத்திரை பட்டியல் கடந்த மாதம் தான் அறிவுசார் சொத்து இந்தியா தளத்தில் காணப்பட்டது - அதன் இந்தியா வெளியீட்டில் பரிந்துரைக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Xiaomi 16: 50MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2! செப் 24ல விற்பனை
  2. Realme P3 Lite 5G: 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ₹12,999! செப் 13-ல ரிலீஸ்!
  3. iPhone 17: ₹82,900-க்கு 120Hz ProMotion, A19 சிப், Apple Intelligence! ஆப்பிளின் புது மாஸ் போன்!
  4. iPhone 17 Pro & Pro Max: 48MP ட்ரிபிள் கேமரா, 8X ஜூம், A19 Pro! ₹1,34,900-ல மாஸ்
  5. iPhone Air: 5.6mm ஸ்லிம் டிசைன், ₹1,19,900-க்கு Apple Intelligence! iPhone 16 Plus-ஐ ரீப்ளேஸ் பண்ணுற புது ஹீரோ!
  6. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G, சாட்டிலைட் SOS, ஹைபர்டென்ஷன் அலர்ட்ஸ்! ₹25,900-லிருந்து! #AppleWatch #AweDropping
  7. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  8. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  9. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  10. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »