Redmi 8A: 5,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் இந்த போன் வரும் எனப்படுகிறது.
பிரத்யேக இணையப் பக்கம் மூலம், 8A வெளியிடும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 ஆம் தேதி, ரெட்மீ 8A ஸ்மார்ட் போன், இந்திய சந்தையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் மற்றும் ஷாவ்மியின் எம்.காம் தளங்களில் அதற்கான பிரத்யேக இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளன. ரெட்மீ 7A போனின் அடுத்த வெர்ஷனாக வரும் ரெட்மீ 8A, அதிவேக சார்ஜிங் வசதியைப் பெற்றிருக்கும் எனப்படுகிறது. இந்த புதிய போனில் வாட்டர்-ட்ராப் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளதும் தெரிகிறது. இதைத் தவிர டூயல் ரியர் கேமரா மற்றும் எச்.டி+ திரையுடன் வருமாம் 8A.
‘ஆரா வேவ் க்ரிப்' வடிவமைப்புடன் வரும் ரெட்மீ 8A மூலம், போனை கையில் பிடித்திருப்பது வசதியாக இருக்கும். 8A போனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில் போன் குறித்து பல்வேறு தகவல்கள் பூடகமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
டிஸ்ப்ளே, ‘வேற லெவலில்' இருக்கும் என்றும், ‘செல்ஃபிக்கள் அட்டகாசமாக' இருக்கும் என்றும், ‘பலகட்ட பணிகளிலும் போன் இலகுவாக இயங்கும்' என்றும் அடுக்கடுக்காக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ரெட்மீ 7A போனில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி பொருத்தப்பட்டிருந்த நிலையில், ரெட்மீ 8A-வில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும் எனப்படுகிறது.
பிரத்யேக இணையப் பக்கம் மூலம், 8A வெளியிடும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளியிடும் நிகழ்ச்சிக்காகவும் தனியாக ஒரு இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரெட்மீ 8A விலை (எதிர்பார்க்கப்படுவது):
ரெட்மீ A வகை போன்களைப் பார்க்கும் போது, 8A ஸ்மார்ட்போன், 7A-வின் அடுத்த வெர்ஷனாக தெரிகிறது. விலையைப் பொறுத்தவரை, 7A-வுடன் ஒப்பிடும்போது, ரெட்மீ 8A, சுமார் 5,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 8A சிறப்பம்சங்கள் (சொல்லப்படுபவை):
இன்னும் 8A குறித்தான முழு தகவல்களை சொல்லவில்லை ஷாவ்மி. அதே நேரத்தில் ரெட்மீ 8A-வில், 6.217 இன்ச் எச்.டி+ திரை, டி.எஃப்.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 5,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் இந்த போன் வரும் எனப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More