மீண்டும் விற்பனைக்கு வந்தது Redmi 8A Dual...!

இந்தியாவில் Redmi 8A Dual-ன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.6,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விற்பனைக்கு வந்தது Redmi 8A Dual...!

Redmi 8A Dual இந்த மாத தொடக்கத்தில் Redmi 8A-க்கு மேம்படுத்தலாக அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • Redmi 8A Dual விற்பனை Mi.com & அமேசான் மூலம் நேரலையில் உள்ளது
  • இந்த போன் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது
  • Redmi 8A Dual தனித்துவமான வேரியண்டுகளில் கிடைக்கிறது
விளம்பரம்

Redmi 8A Dual இந்தியாவில் மீண்டும் விற்பனை வந்துள்ளது. பிப்ரவரி 25 செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்களுக்கு Redmi 8A Dual-க்கான திறந்த விற்பனையை, ஷாவ்மி நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த புதிய வளர்ச்சி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட ரெட்மி தொலைபேசி ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட கால விற்பனை சுற்றுகள் மூலம் கிடைத்தது.


இந்தியாவில் Redmi 8A Dual விலை, விற்பனை சலுகைகள்: 

இந்தியாவில் Redmi 8A Dual-ன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.6,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999 விலைக் குறியீட்டுடன் வருகிறது. இரண்டு மாடல்களும் Midnight Grey, Sea Blue மற்றும் Sky White வண்ணங்களில் வருகின்றன. மேலும், திறந்த விற்பனை Mi.com இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, இது Amazon மூலமாகவும் நேரலையில் உள்ளது. 

Redmi 8A Dual-ன் விற்பனை சலுகைகளில், அமேசான் மூலம் ரூ.6,600 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் கிடைக்கும் மற்றும் என்ஐ.காம் மூலம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு EMI ஆப்ஷன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சதவீத உடனடி தள்ளுபடி. 8A Dual வாடிக்கையாளர்களுக்கு no-cost EMI ஆப்ஷனையும் அமேசான் வழங்குகிறது.

Redmi 8A Dual இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கடந்த வாரம் அமேசான், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மூலம் முதல் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் நாட்டின் பல்வேறு சில்லறை கடைகள் மற்றும் ஆன்லைன் சந்தைகள் மூலமாகவும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.


Redmi 8A Dual விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) Redmi 8A Dual, MIUI 11 உடன்  Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 19: 9 விகிதத்துடன் 6.22 இன்ச் எச்டி + (720x1520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு 3 ஜிபி ரேம் உள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இதில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.

Redmi 8A Dual-ல் 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை ஜியோமி வழங்கியுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். போனில் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோவும் உள்ளது. தவிர, இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Can Samsung Galaxy M31 beat the Redmi Note 8 Pro, Poco X2? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                                   

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »