இந்தியாவில் Redmi 8-ன் விலை ரூ. 7,999 முதல் ஆரம்பமாகிறது
Redmi 8, HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது
Redmi 8 இன்று இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த பட்ஜெட் போன் Flipkart, Mi.com மற்றும் Mi Home stores மூலம் விற்பனைக்கு வரும்.
Redmi 8-ன் விலை, விற்பனை சலுகைகள்:
The Redmi 8-ன் 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 7,999 நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 8,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஜியோமி முதல் ஐந்து மில்லியன் யூனிட்டுகளுக்கு 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலை மட்டும் ரூ. 7,999-க்கு வழங்குகிறது. இந்த போன் Emerald Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், இந்த போன் Flipkart, Mi.com, and Mi Home stores மூலம் மதியம் 12 மணிக்கு வாங்குவதற்கு கிடைக்கும்.
Redmi 8-ன் விற்பனை சலுகைகளில் HDFC வங்கி டெபிட் கார்டுகளில் 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது EMI பரிவர்த்தனைகளில் ஐந்து சதவிகித கேஷ்பேக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரண்டு கேஷ்பேக் சலுகைகளும் பிளிப்கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், no-cost EMI ஆப்ஷன்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 667-ல் ஆரம்பமாகிறது.
ஜியோமி, Redmi 8-ஐ தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது.
Redmi 8-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Redmi 8, Android 9 Pie உடன் MIUI 10 இயங்குகிறது. Corning Gorilla Glass 5 பாதுகாப்புடன் 6.22-inch HD+ Dot Notch display அம்சத்தைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.
Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 lens உடன் 12-megapixel Sony IMX363 முதன்மை சென்சார் மற்றும் 2-megapixel depth sensor ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Face Unlock உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் அம்சங்களும் உள்ளன.
ஜியோமி, Redmi 8-ல் 64 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்கியுள்ளது. இது microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, infrared, wireless FM radio, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். மேலும், போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது. ஜியோமி, Redmi 8-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series