Redmi 8 இன்று மீண்டும் Flipkart, Mi.com மற்றும் Mi Home Stores வழியாக விற்பனைக்கு வருகிறது. Xiaomi போன் இந்த மாத தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இதுவரை சில முறை மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் Redmi 8-ன் விலை மற்றும் சலுகைகள்:
Redmi 8-ன் 4GB RAM வேரியண்ட் வெறும் ரூ. 7,999-க்கு விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, நிறுவனம் நாட்டில் முதல் 5 மில்லியன் யூனிட் தொலைபேசிகளை விற்கும் வரை இயங்கும். இந்த போன் Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue நிறங்களில் வருகிறது. இன்றைய Redmi 8 விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி, Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக இந்த போன் வழங்கப்படும். மூன்றாம் தரப்பு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனையைத் துவங்க நிறுவனம் எப்போது திட்டமிட்டுள்ளது என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.
விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, HDFC வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குவோர்க்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது Mi.com. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோர்க்கு 5 சதவீத கேஷ்பேக்கை பிளிப்கார்ட் வழங்குகிறது.
Redmi 8-ன் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Redmi 8, MIUI 10 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. மேலும், Corning Gorilla Glass 5-யுடன் 6.22-inch HD+ Dot Notch டிஸ்பிளேவோடு வருகிறது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, 18W fast charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இமேஜின் திறன்களைப் பொறுத்தவரை, Redmi 8-ல் dual rear கேமரா அமைப்பை பேக் செய்வதோடு, f/1.8 aperture மற்றும் 2-megapixel depth சென்சாருடன் 12-megapixel primary shooter ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக, 8-megapixel கேமரா முன்புறத்தில் உள்ளது. மற்ற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ், microSD card slot (512GB வரை), USB Type-C port மற்றும் பின்புறத்தில் fingerprint சென்சாரும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்