ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, சியோமி இந்தியாவில் தலைமை நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் அறிவித்துள்ளார். இந்த தகவலை வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது, எந்த விலையில் விற்பனையாகப்போகிறது என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அவர் மேலும் கூறுகையில் ரெட்மீ 4A, ரெட்மீ 5A மற்றும் ரெட்மீ 6A ஸ்மார்ட்போன்கள், கடந்த ஏப்ரல் மாதம் வரை 23.6 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இந்த ரெட்மீ 7A சீனாவில் மே மாதம் அறிமுகமாகி, இந்த மாதத்தின் துவக்கத்தில் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சீனாவில் வெளியான இந்த ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியிருந்தது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 549 யுவான்கள் (5,500 ரூபாய்), 599 யுவான்கள் (6,000 ரூபாய்) என்ற விலையில் சீனாவில் விற்பனையானது.
ரெட்மீ 7A: சிறப்பம்சங்கள்!
இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 5.45-இன்ச் HD திரை (720x1440 பிக்சல்கள்), 18:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது அந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அலவிலான கேமராவை கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 256GB வரையில் சேமிப்பை கூட்ட microSD கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்