'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போன் இந்தியாவில் எந்த தேதியில் அறிமுகமாகவுள்ளது என்பதை ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின்படி, இந்த 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போன் ஜூலை 4 அன்று அறிமுகமாகவுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் தன் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளது இந்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்துடன் இணைந்து Mi தளத்திலும் விற்பனையாகலாம். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மே மாதம் அறிமுகமாகி சென்ற மாதம் விற்பனைக்கு வந்தது. ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,000mAh பேட்டரி அளவு பொன்ற அம்சங்களை கொண்டிருந்தது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாகப்போகிறது என்ற அறிவிப்பை அறிமுக தேதி குறிப்பிடாமல் சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மனு குமார் ஜெய்ன் முன்னதாக வெளியிட்டிருந்தார். மேலும் அந்த அறிவிப்பில்,"இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியான 'ரெட்மீ 7A' ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகவே இந்தியாவில் அறிமுகமாகும்" என குறிப்பிட்டிருந்தார்.
#Redmi7A: we are upgrading a MASSIVE feature for the India variant. #MadeForIndia #MakeInIndia ????????
— Manu Kumar Jain (@manukumarjain) June 29, 2019
Something that all of you loved in #RedmiNote7 & #MiA2! Something that none of the other brands provide under ₹20,000 segment.
Any guesses? ????#Xiaomi ❤️ #SmartDeshkaSmartphone
ரெட்மீ 7A: எதிர்பார்க்கப்படும் விலை!
முன்னதாக சீனாவில் வெளியான இந்த ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிமுகமாகியிருந்தது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு, 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் 549 யுவான்கள் (5,500 ரூபாய்), 599 யுவான்கள் (6,000 ரூபாய்) என்ற விலையில் சீனாவில் விற்பனையானது.
ரெட்மீ 7A: சிறப்பம்சங்கள்! (சீன வெர்ஷன்)
இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 5.45-இன்ச் HD திரை (720x1440 பிக்சல்கள்), 18:9 திரை விகிதத்தை கொண்டுள்ளது அந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ 7A ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் அலவிலான கேமராவை கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
4,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 256GB வரையில் சேமிப்பை கூட்ட microSD கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்